பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோதுமையின் பெயர்கள்

பலசாலி அரிசி

1. பலசாலி அரிசி (சி.வை.அ.), மிகுபல அரிசி (சி.வை. அ.), மிகுபலம் (சா.சி.பி.) ஆகிய பெயர்கள் கோதுமைக்குத் தரப்பட்டுள்ளன. நெல்லரிசி, கம்பரிசி, தினையரிசி, வரகரிசி, மூங்கிலரிசி முதலியனபோல் கோதுமையும் அரிசி எனப் படுகிறது.

மற்ற அரிசிகளினும், கோதுமை, மிகுந்த வலிமையை . ஆற்றலைத் தருவதால், இதற்கு இப்பெயர்கள் ஏற்பட் டுள்ளன. கோதுமையில் பொதுவாக 86.7% பகுதி வலிமை தருவதாகும் எனச் சொல்லப்படுகிறது. சிறப்பாக நோக்கின், 8 முதல் 17 விழுக்காடு புரோட்டினும், 2 முதல் 3% சர்க்கரை ஆற்றலும், 1.5.2% தாதுப் பொருள்களும் உள்ளன வாம். தாதுப்பொருள் ஆற்றலில் கால்சியம், பாசுவரம், இரும்பு முதலியன உள்ளனவாம். மற்றும் (ஊட்ட ஆற்றல்) வைட்டமின் B1, B2, C முதலானவையும் காரட்டீனும் (Carotene = ஏ - உணவூட்டப் படிவங்களின் முற்பட்ட காலப்பெயர்) இருக்கின்றன. கோதுமையின் முளைக் கருவி லுள்ள எண்ணெய்க் கூறுதான் வைட்டமின் Eக்கு இன்றி யமையாத அடிப்படையாம். 100 கிராம் கோதுமை, 345.4 காலரி வெப்பம் அளிக்குமாம். எனவே, மிகு பலசாலி அரிசி என்பது பொருந்தும். இவை பயனால் பெற்ற பெயர்களாம்.

2. இதற்கு, மிலேச்ச அரிசி (சி.வை.அ.), மிலேச்ச சாகம் (மு.வை.அ.), மிலேச்சாசம் - மிலேச்சை (சா.சி பி.,)