பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மர இனப் பெயர்கள்

வேலை நமக்கு இராது"- எனத் தோழியும் தலைவியும் பேசிக் கொள்கின்றனர். இப்பாடலால் வேங்கைக்குக் கணி என்னும் பெயர் உள்ளமை புலப்படும். சார்பு - ஒப்புமை.

கோழை அறுக்கும் சூரன்: இது திப்பிலி. கோழையைத் திப்பிலி என்னும் மருந்துச் சரக்கு அறுத்துப் போக்கு வதால், இது கோழை அறுக்கும் சூரன் எனப்பட்டது. இப்பெயர் போகர் நிகண்டில் கூறப்பட்டுள்ளது:

' கப்பிலியாம் கோழைதனை அறுக்கும் சூரன்

கருதியதோர் திப்பிலியின் பெயரு மாமே". (701)

என்பது நிகண்டுப் பாடல் பகுதி. இது பற்றிக் கூறும் தேரையர் பாடல் வருமாறு:

' இருமல் குன்மம் இரைப்புக் கயப்பிணி

ஈளை பாண்டு சந்யாசம் அரோசகம் பொருமல் ஊதை சிரப்பிணி மூர்ச்சைநோய்

பூரிக்கும் சலதோடம் பீலிகமும்..... பேரும் திப்பிலிப் பேர் அங்கு உரைக்கவே'.

தேரன் வெண்பாப் பாடல்:

' ஈளை இருமல் இரைப்புப் பசப்பிணிகள்

மாள வொழியாமல் வாட்டுமே”. எனவே, திப்பிலிக்கு (கொடிவகை) இப்பெயர் பொருந்தும். பொருட் பண்பு நூலில் இதற்குக் கோழை அறுக்கி’ என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்.

திரை போக்கி: மிளகு இது. திரை என்பது, உடலில் தோல் சுருங்குதலாகும். மிளகு, திரை வராமல் போக்கிக் காக்குமாம்; அதனால் இப்பெயர்த் தாயிற்று, போகர் நிகண்டில் இப்பெயர் கூறப்பட்டுள்ளது. பாடல்: