பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமையால் பெற்ற பெயர்கள் சில

அணில்வரிக் கொடுங்காய் = இது வெள்ளரிக்காய். வரி க கோடு. கொடுமை = வளைவு. அணிலின் முதுகின்மேல் உள்ள கோடுகள் போல், வெள்ளரிக்காயின் மேலும் கோடுகள் இருக்கும். வெள்ளரிக்காய் ஒரளவு வளைந்தும் இருக்கும். அதனால் வெள்ளரிக்காய் இப்பெயர் பெற்றது. வடிவம். (சா. சி. பி.)

அணில்வால் = இது ஒருவகைத் தினைக் கதிரைக் குறிக்கும். அந்தத் தினைக் கதிரின் தோற்றம், அணிலின் வால் போன்றிருப்பதால் அணில்வால் எனப்பட்டது. வடிவம். (சா. சி. பி.)

அரிவாள் மூக்குச்செடி=இது மிளிரை என்னும் செடி. அரிவாள்மூக்கு போன்றிருப்பதால் இப்பெயர்த்து. வடிவு. (சி. வை. அ.)

ஆனையடிக் கிழங்கு = இது பெருங்கருணைக் கிழங்கு. சட்டிக் கருணை என்றுங் கூறுவர். ஆனையின் காலடிபோல் பெரிதாயிருத்தலின் இது இப்பெயர்த்து. (சா. சி. பி.). வடிவம். இது சட்டிபோலவும் இருத்தலின் சட்டிக்கருணை எனப்படும். (த. பே. அ.)

இரத்தன்கனி = இது கோவைப்பழம். இரத்தம்(குருதி) போல் சிவந்திருப்பதால் இப்பெயர். வடிவம் - நிறம். (சா. சி. பி.) -

எழுத்தாணிப் பூண்டு= எழுத்தாணி போன்ற பூக்களை உடைய ஒருவகைச் செடி இது. எழுத்தாணி என்பது,