பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் மாற்றுக் கலைப் பெயர்கள்

பொன் என்றால் உலோகம். ஒர் உலோகத்தை மற்றோர் உலோகமாக மாற்றுவது, பொடி (பஸ்பம், செந்தூரம்) செய்வது, திரித்துப் பல செயல்களுக்குப் பயன் படுத்துவது முதலியன செய்வதைப் 'பொன் மாற்றுக் கலை’ எனலாம். இரச வாதம் என்பது இதைச் சார்ந்ததே.

இரசம் என்பது, வெள்ளிபோல் பளபளப்பான ஒரு வகை நீர்ப் (திரவப்) பொருள்; பளு உள்ளது ; தொட்டால் கையில் ஒட்டாது; நெருப்பில் பட்டால் ஆவி யாகும்; கீழே கொட்டினால் சிதறிப் போகும். நீர்ப் பொருளான இந்த இரசத்தைக் கட்டச் செய்வது ஒர் அரிய செயல்.

பொன் மாற்று தமிழில் வேதியியல் எனவும், வட மொழியில் இரசாயனம் எனவும், ஆங்கிலத்தில் (Chemistry) எனவும் பெயர் வழங்கப்படுகிறது. வேதியை வேதம் என்றும் கூறுவர். இந்த வேதமே பின்பு இரச வாதம் எனப்பட்டுவிட்டது. இரசாயனம் என்னும் சொல் இரசம் என்பதிலிருந்து தோன்றியதே.

இரும்பு, ஈயம், தாமிரம் போன்ற மட்டமான உலோகங் களைத் தங்கமாக்கிப் பெரும்பொருள் ஈட்டக் கண்டு பிடிக்கப்பட்ட கலை தாது வாதம் (Alchemy) எனப்படும். இது, பிற்காலத்தில் நடந்த பிணி போக்கல், மற்ற மற்ற பொருள்களில் மாறுதல் செய்தல் முதலியவை தொடர் பான ஆராய்ச்சியின் பயனாக, இக்காலத்தில், வேதியியல் (Chemistry), QuħLousi (Physics) Guirsirp są tuomi