பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர் இனப் பெயர்கள் 1?

—.

கோதுமையால் உடல் வலிமை (திடம்) உண்டாகும்; விந்து பெருகும்; காம உணர்வு மிகும் - முதலிய செய்தி களைக் கூறும் அ.கு.பா. பாடல்கள் வருமாறு:

'கோதுமையின் நற்குணந்தான் கோதில் பலங்கொடுக்கும்;

தாதுவிர்த்தி யாக்கும்; தனிவாய்வைச் - சேதிக்கும்; பித்தம் அளிக்கும்; பிரமேகத்தைக் கெடுக்கும்; உத்தமமாம் என்றே உரை -

'கோதுமைக் கஞ்சி கொடுஞ்சுரம் நீரேற்றம்இவை

காதுமைக்கும் சந்நிக்குங் காதரமே - போத உடலும் திடமாம் ஒலிவண்டும் கூற்றும் கடலும் பணிவிழியே காண்’ -

“தேகம் பலக்கும்; அதிதீபனமும் உண்டாகும்; நிறை மோகம் பெருகும்; ஐயமூர்க்கமறும் - கோகமிக ஒதி யடையும்; உயர்கொங்கை மாதரசே கோதி யடையைக் கொடு”. (கோதி அடை = கோதுமை அடை)

இப்பாடல்களாலும் கோதுமையின் வலிமைச் சிறப்பு விளங்கும்.

5. கறுப்பு வாற் கோதுமை கிருட்டிண நயனம்’ (சா.சி.பி.) என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. கிருட் டிணம் = கறுப்பு, நயனம் = கண். கோதுமை அரிசிமணி, பார்ப்பதற்கு, ஒருவகையில் கண் போன்ற தோற்றம் உடை யதாயிருத்தலின் கறுப்பு வாற் கோதுமை இப்பெயர் பெற்றது போலும். ஆங்கிலத்தில் இது (Black Barley) எனப்படும். இது நிறத்தால் பெற்ற பெயராம்.

சிற்சிலர், கோதுமையை, கோதமை - கோதும்பை - கோதம்பை - கோதும, கோதுமம், கோதம்ப, கோதி என்றெல்லாம் வழங்குகின்றனர்.