பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 21

ஒளவை நீண்டநாள் உயிர் வாழ்வதற்காக அதியமான் நெல்லிக்கனி அளித்த வரலாறு அறிந்ததே! எனவே, நெல்லிக்கு 'அமிர்தபலம்’ எனும் பெயர் தரப்பட்டுளது; பயன்.

அழகான கருப்பி

நீலஞ் சோதி மரத் தோற்றம் அழகுடன் கருப்பா யிருப்பதால் அழகான கருப்பி எனப்படலாயிற்று. நிறம்.

அழகியாள்

செவ்வகத்தி அழகாயிருப்பதால், அழகியாள், அழகு சிவப்பி என்னும் பெயர்கள் வந்தன. பண்பு.

அகண்ட மாரீசன்

பூசணிக்கு அகண்ட மாரீசன்’ எனும் பெயருண்டு.

அகண்டம் = விரிந்தது, பெரியது. மாரீசம் = மாயம்.

இதன் தோற்றம் கருதி இப்பெயர் தரப்பட்டது. வடிவு.

அணி முலை மாது

மற்ற கொடிகளைப் போல் இல்லாமல், பூசனிக்கு அழகிய முலை போன்ற பெரிய காய் இருப்பதால், இதற்கு அணி முலை மாது என்னும் பெயரும் உண்டு. வடிவு.

அதிக சுர சாந்தினி

வல்லாரை பற்றிப் பொருட் பண்பு நூலில் உள்ளது வருமாறு:- "எல்லாச் சுரங்களுக்கும், வல்லாரை இலைதுளசி இலை - மிளகு - இவற்றை ஓரளவாகத் தூக்கி அரைத்து, குன்றி யெடை மாத்திரை செய்து காலை மாலை இரண்டு வேளையும் கொடுத்துவர, அவைகள் தணியும்’இதன்படி, அதிக சுரத்தையும் (மிக்க காய்ச்சலையும்) சாந்தி