பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 25

முத்தொள்ளாயிரம் என்னும் நூல் பாடல் ஒன்று ஒப்பு நோக்கத்தக்கது:

சேரனது நாட்டில் பொய்கை முழுவதும் அடர்த்தியாக அரக்காம்பல்-அதாவது-சிவந்த ஆம்பல் பூக்கள் மலர்ந்திருந் ததால், தண்ணீர் தீப்பற்றி எரிகிறது என்று பறவை யினங்கள் அஞ்சித் தம் கையாகிய சிறகால் (கை போன்ற சிறகுகளால்) தம் குஞ்சுகளை அடக்கிக் கொண்டு கூக்குரல் எழுப்பினவாம். பாடல்:

" அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ

வெள்ளம் தீப் பட்ட தெனவெரீஇப்-புள்ளினங்கள் கைச்சிறகால் பார்ப்புஒடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு '

என்பது பாடல். 'இரத்த நதி' என்பதோடு, 'வெள்ளம் தீப்பட்டது என்பது ஒப்புநோக்கற் பாலது.

இருகுரங்கின் கை

இப்பெயர் முசுமுசுக்கை’ எனும் கொடிக்கு உரியது. முசு என்றால் குரங்கு. இருமுறை முசு’ என்னும் சொல் வந்து, பக்கத்தில் 'கை' என்பதையும் பெற்றிருப்பதால், முசுமுசுக்கை சொல் விளையாட்டாக இருகுரங்கின் கை' என்னும் பெயர் பெற்றது.

இருதய கந்தம்

இருதயத்துக்கு நலம் பயப்பதால், கொத்துமல்லி

'இருதய கந்தம்’ எனப்பட்டது. பயன்.

இறைவர் மலர்

சிவனுக்குக் 'கொன்றை வேந்தன்' என்னும் பெயர் உண்மையை,