பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மர இனப் பெயர்கள்

' கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே '.

என்னும் அவ்வையின் கொன்றை வேந்தன் - காப்புச் செய் யுளிால் அறியலாம். சிவனுக்கு உரியதாதலின், கொன்றை, 'இறைவர் மலர்', ஈசனார் அணி என்னும் பெயர்களைச் சார்பினால் பெற்றுள்ளது.

இலை முலை மாது: இது தூதுவளை. தூதுவளைக் கொடியில் இலை உண்டு; ஆனால், முலை போன்ற உறுப்பு ஒன்றும் இல்லை. அப்படியிருந்தும் இலை முலை மாது' எனும் பெயர் தரப்பட்டுள்ள்து. இன்லயையே முலையாக உருவகித்து, இலையாகிய முலையையுடைய மாது தூதுவளை என்று பொருள் செய்வதைத் தவிர வேறு வழியின்று. இதற்குத் துண்ை செய்யும் செய்திகளும் உண்டு.

(1) முலை முக்கு அரிவாள்' என்னும் தொடருக்கு, 'இலை மூக்கு அரி கத்தி என நாம தீப நிகண்டு (421) பொருள் கூறியுள்ளது. எனவே, இலை, முலை போலக் கருதப்படுவ துண்டென அறியலாம்.

(2) முன்ல்க்குக் கூரிய யானைத்தந்தத்தை ஒப்புமை யாகக் கூறுவதுண்டு. முருகன் தன்ன்ை மீண்க்கும்படி வள்ளியிடம் கூற, அவள் மறுக்க, முருகன் உடனே அண்ண்ன் பிள்ளையாரை நினைத்து வேண்ட, பிள்ளையார் யானை யாக வர, வள்ளி முருகன் பின்னின்று அவனைக் கட்டிக் கொள்ள, யானையின் தந்தம் முன்னால் முருகனின் மார்பைக் குத்துங்கால், வள்ளியின் கூரிய முலைகளாகிய தந்தங்கள் முருகனின் முதுகைக் குத்தினவாம். கந்த புராணம் - வள்ளியம்மை திருமணப் படலத்தில் உள்ள பாடல் (113) வருமாறு: