பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மர் இனப் பெயர்கள்

ஐமுகி

முத்துக் கொட்டை எனப்படும் ஆமணக்கின் பூவில்

ஐந்து புல்லிகள் (இதழ்கள்) இருப்பதால், ஆமணக்கு ஐமுகி: எனப்பட்டது. வடிவம்.

ஒடியல் கிழங்கு

பெரும்பாலும் கிழங்கு வகைகளை எளிதில் ஒடிக்க முடியாது. ஆனால், மெல்லியதாகவும் நீண்டதாகவும் இருக்கும் பனங்கிழங்கை எளிதில் ஒடித்து விடலாம். அதனால் பனங்கிழங்கு ஒடியல் கிழங்கு எனப்பட்டது. வடிவம்.

ஒட்டுக் கண்ணாள்

பெரு வெண்டையின் பூ இதழ்கள் அடியில் சிறிதளவு ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதுபோல் தோன் றும். கேசரக் குழாய் அக இதழ்களோடு ஒட்டிக்கொண்டி ருக்கும். சூலகத்தில் உள்ள சூல்களும் ஒட்டு முறையில் இருக்கும். இதனால் பெருவெண்டை 'ஒட்டுக் கண்ணாள்' ஆயிற்று. வடிவம்.

ஒண்டிப் பார்ப்பான்

ஆதொண்டையின் இலைகள் தனித்தனியாக இருக் கும்; அதனால் ஆதொண்டை ஒண்டிப் பார்ப்பான் எனப்பட்டது. ஆதொண்டைக் கனி சிறிது நீண்டு உருண்டி ருக்கும். கனி ஒவ்வொரு முலைபோல் காணப்படுவதால், ஆதொண்டைக்கு ஒரு முலை மாதர்' என்ற பெயரும் உண்டு, வடிவம். .

ஒன்றல் காரி

ஒன்றல் காரி - ஓரிடத்தில் ஒன்றியிருந்து (ஒண்டி யிருந்து) வஞ்சிப்பவள். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரி