பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 39

நகை = அழகிய பற்களை உடைய; அத்திக்கு = தெய்வ யானைக்கு; இறை = கணவனாகிய முருகன் - என்பதாம்.

இப்பெயர் பெற்றது. வடிவம்.

குடிவருணி குடித்தல் = பருகல்; வருணம் = நீர். குடிக்கும் நீரையுடைய இளநீர் குடிவருணி எனப்பட்டது. பயன்.

குடைச்சி: சிறு கீரை குப்பையில் குடைபோல் கவிழ்ந்து கொண்டிருப்பதால் வந்தது இப்பெயர்-வடிவம். இதற்குக் குப்பைக் குடையாள் என்னும் பெயரும் உண்டு.

குட்டப்பாண்டு நாசனி: கருமருது, குட்ட நோயையும்

பாண்டு நோயையும் போக்கும். பயன்.

குட்டம் போக்கி: வெண்கடுகும் சுரபுன்ன்ையும் குட்ட நோயைப் போக்கும்-பயன்.

குட்ட விர்ணம் போக்கி - சேங்கொட்டை குட்டப் புண்ணை ஆற்றும் - பயன்.

குணத்தி = வல்லாரை பல பிணிகளைக் குணப்படுத் தும் குணம் (பண்பு) உடையது. பயன்.

குணம் பாழ். திகைப்பூடு என்னும் பூண்டை மிதித்தவர் கள் குணம் பாழாவர். மதிமயங்குவர். இதனால் குணப் பாழ் என்னும் பெயர் ஏற்பட்டது. திகைப்பூடுக்கு மதி மயக்கிப் பூடு, திகைப்பூண்டு, மன மயக்கிப் பூண்டு என்ற பெயர்களும் உண்டு. பயன்.

குமரகன் பெண்டிர் = குமரகனாகிய முருகனின் மனைவியாகிய வள்ளி என்னும் பெண்டிர். இங்கே சொல் விளையாட்டாக, வள்ளிக் கொடி குமரகன் பெண்டிர் எனப்பட்டுள்ளது.