பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மர இனப் பெயர்கள்

எனவே, மந்தாரை என்னும் பூச்செடி, சொல் விளையாட் டாகக் கூனி எனும் பெயர் பெற்றுள்ளது.

கெருடாதிபதி: கெருடன் = கருடப் பறவை. இதனை ஊர்தியாக உடைய அதிபதி (தலைவன்) விஷ்ணுவாகிய திருமால். எனவே, விஷ்ணுகாந்தி என்னும் பூண்டு, சொல் விளையாட்டாகக் கெருடாதிபதி' எனப்பட்டது.

கேரளி: கேரளம் = மலையாள நாடு. மலையாளத்தில் விளையும் ஒருவகை நெல் கேரளி எனப்பட்டது. இடம்.

கபம் அறுக்கும் குடோரி = யானைத் திப்பிலி கபத்தை அறுக்கக்கூடியது. பயன். குடோரி=அறுப்பது.

குடிகேடன்: கெட்டுப் போனவரின் குடியில் - வீட்டில் எருக்கு பூக்கும். ஒளவையாரின் பாடல்:

வேதாளம் சேருமே ; வெள்ளெருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே ; - மூதேவி சென்றிருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; மன்றோரம் சொன்னார் மனை”. (நல்வழி-23) இப்பாடலில், பொய்ச்சான்று கூறியவரின் வீட்டில் நிகழக் கூடியவற்றுள் எருக்கு பூத்தலும் ஒன்று என்று கூறப்பட் டிருப்பது காண்க. எனவே, எருக்குக்குக் குடிகேடன் என்னும் பெயர் பொருந்தும். சார்பு.

கையில்கனி: இது நெல்லிக்கனி. ஒன்று தெளிவாகப் புரிவதற்கு ஒப்புமையாகக் கையில் உள்ள நெல்லிக்கனி போல’ என்று கூறுவது வழக்கம். இது சம்சுகிருதத்தில் 'கரதலாமலகம்’ எனப்படும். கரதலம் = கை; ஆமலகம் = நெல்லி. உள்ளங்கை நெல்லிக்கனி' என்பது, தமிழில் தண்ணீர் பட்ட பாடு. மலை உச்சியில்-மலைப் பிளவில்மரத்தில்-உள்ள நெல்லிக்கனியினும் கையில் உள்ள நெல்லிக் கணி உறுதியானது-தெளிவானது அன்றோ? சார்பு.