பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மர இனப் பெயர்கள்

என்பது பாடல் பகுதி. விறகுக்கும் நெருப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அப்பரின் திருவானைக்கா தேவாரப்பாடல் ஒன்றிலுள்ள

' செத்தால் வந்து உதவுவார் ஒருவரில்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் ’ என்னும் பகுதியிலும் விறகுத் தீயை அறியலாம். பெரிய விறகாகிய உடம்பைச் சிறிய விறகுத் துண்டுகளால் எரிப்பார்கள்.

விறகு என்றதும், சவுக்கையே முதலிடம் பெறும். சவுக்கு மரம், வீடு கட்டவும், பந்தல் போடவும் உதவும். இறுதியில் விறகாகும். பெரும்பாலும் விறகுக்காகவே சவுக்கு பயிரிடப்படுகிறது. சவுக்கில் நெருப்பு விரைவில் பற்றும்; நன்றாக எரியும்; சவுக்கு எரிக்கும் நெருப்பு மிக்க வெப்பம் தரும்; புகையாது; சாம்பல் சிறிதளவே - எனவே, விறகுப் போட்டியில் சவுக்கு வெற்றி பெறலாம்.

குப்பைமேனி, வெற்றிலை முதலியவற்றினும் வெப்பம் மிக்குடைய சவுக்கு, நெருப்புக் கடவுளாகிய சிவன் பெயரால் குறிப்பிடப்படுவதில் வியப்பில்லையன்றோ ? எனவே, சவுக்கு மரம், சிவசிவா மரம் என இரட்டைச் சிவம் பெற்றது. உடற்கூறு.

சிதம்பரம்: சிதம்பரம் என்னும் ஊரின் பெயர் இங்கே தில்லை மரத்தைக் குறிக்கிறது. தில்லைமரம் இருந்ததால் தில்லை என்னும் பெயரை அவ்வூர் முதலில் பெற்றிருந்தது. இரு பெயர்களும் ஒரே ஊரைக் குறிப்பதால் தில்லை "சிதம்பரம் எனப்பட்டது. சார்பு.

சிநேகம்: சாதிக்காய் நண்பன்போல் உதவுவதால் சிநேகம் எனப்பட்டது. பயன். சாதி என்னும் சொல்,