பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 47

உறவு - நட்பைக் குறிப்பதால் சொல்விளையாட்டு எனவும் கூறலாம்.

சுடலைதனில் நிர்த்தன் . சுடலையாடி. சுடலை = சுடுகாடு. நிர்த்தன் = நடனமாடுபவன். சிவன் ஊழியிறுதி யில் சுடுகாட்டில் நடம் புரிவாராதலின் இப்பெயர்கள் பெற்றார். இவை சொல் விளையாட்டாகச் சிவனார் வேம்பைக் குறிக்கலாயின. -

சுந்தர நங்கை அரசமரம் காண்பதற்குச் சுந்தரமாய்அழகாய் இருப்பதால் இப்பெயர் பெற்றது. வடிவம். நங்கையர் அரசமரம் சுற்றுவர் அல்லவா?

சுர சாந்தினி : வல்லாரை சுரத்தை காய்ச்சலைச் சாந்தப்படுத்துவதால்-தணிப்பதால், இப்படியும் ஒரு பெயர் பெற்றுள்ளது. பயன்.

சுவாச காசகி - காசநோய் கண்டு மேல்சுவாசம்-மேல் மூச்சு வாங்குவோர்க்குத் தாளிச பத்திரி நலம் பயப்பதால் இப்பெயர் பெற்றது. பயன். வீட்டு மருத்துவத்தில் இது பயன்படுவதுண்டு.

சுவாசம் போக்கி - மேல்மூச்சு - கீழ்மூச்சு வாங்கும் இரைப்பு நோய்க்கு நலம் பயக்கும் தான்றிக் காய்க்கு உரியது இப்பெயர். பயன்.

சுவேதம் ஆடிய கூத்தன் . சுவேதம் = வெள்ளி-மதுரை வெள்ளியம்பலத்தில் சிவன் கூத்தாடுவதால், அவருக்கு உரிய இப்பெயர் தில்லைமரத்துக்காயிற்று. சார்பு.

சூரனுட கனி: சூரபதுமன், முருகனால் வெல்லப் பட்டுக் கடல் நடுவே மாமரமாய் நின்றான். அதனால், மாம்பழம் சூரனுட கனி என்னும் பெயரைச் சார்பினால் பெற்றுள்ளது. "சூரனுட என்பதில் உள்ள உட' என்பது 'உடைய' என்னும் பொருளுடையது.