பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 49

வேற்றுமையுடன் ஒற்றுமையுடையன. இலவங்கப்பூவாகிய கிராம்பு தாகத்தைப் போக்கும்; காய்ச்சல் (சுரம்) அடிக்கும்போது ஏற்படும் தாக வறட்சியையும் போக்கும். இப்பயன் பற்றிய அ.கு.பா. பாடல் வருமாறு:

' மேகசுரம் சீதசுரம் வெட்டை சுவாசம் காசம்

தாகபித்தம் வாந்திசர் வாகியநோய் - மேகத்தின் கட்டியொடு தாதுநட்டம் கைப்பருசி போக்கிவிடும் இட்ட இலவங்கத் திலை' - பயன்.

தாகநாசனி: விளாம்பழமும் தாகத்தை யடக்குவதால் இப்பெயர் பெற்றுள்ளது, பயன்.

தாதி: வெங்காயம், தாதிபோல் - செவிலிபோல் இருந்து உதவுவதால் தாதி எனப்பட்டது. ஒப்புமை.

தாய்க்கீழ்ப் பிள்ளை : எட்டிமரக்கன்று தாய் மரத்தின் கீழிருப்பதால் 'தாய்க்கீழ்ப்பிள்ளை' எனப்பட்டது. ஒப்புமை.

திருட பலம்: திருடம் = வலிமை; பலம் = காய், கணி. தேங்காய் வலிமையான ஒட்டுடன் இருப்பதால் திருடபலம்

எனப்பட்டது. வடிவம்.

திருடி கள்ளிக்குத் திருடி என ஒரு பெயர் தரப் பட்டுள்ளது. கள்ளத்தனம் (திருட்டுத் தனம்) உடையவள் கள்ளி (திருடி). இது சொல் விளையாட்டுப் பெயராகும். அடவி என்றால் காடு. காட்டில் உள்ள கள்ளியை 'ஆட வியில் திருடி என்பர்.

திருடி நாயகன் திருமாலின் தெய்வப்பிறவி கண்ணன் (கிருஷ்ணன்). அவன் வெண்ணெய் திருடி என்னும் பெயர் பெற்றவன். எனவே, திருடியாகிய நாயகன் - திருடி நாயகன் என்பது, கண்ணனாகிய விஷ்ணுவைக் குறிக்கும். அப்பெயர், சொல் விளையாட்டாக விஷ்ணு கரந்தைக்கு வைக்கப் பட்டுள்ளது.