பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 53

தோழி: கற்பூர வள்ளி தோழிபோல் உதவுவதால் தோழியாயிற்று. ஒப்புமை (வள்ளி பெண்)

தோன்றியடி. செந்நிறத்துடன் கண்ணுக்கு அழகாகத் தோன்றும் காந்தள் மலர் தோன்றி எனப்பட்டது. இ.சா.:- சீவக சிந்தாமணி,

'கோட்டினந் தகர்களும் கொய்ம்மலர தோன்றிபோல்

சூட்டுடைய சேவலும்’-(73)

தோன்றி (காந்தள்) மலர்போன்ற சூட்டுடைய (செந்நிறக் கொண்டையுடைய) சேவல் - என்பது கருத்து. தோன்றி அடி=தோன்றிக் கொடியின் அடியிலுள்ள கிழங்கு காந்தள் கிழங்கு தோன்றியடி எனப்பட்டது. வடிவம்.

நடக்கையறிவாள்: கொடி வேலிச் செடி, தோட்டங் களில் வேலியையடுத்தும் அல்லது வேலியாகவும் அழகுக் காகவும் வைத்து வளர்க்கப்படுவது. நடப்பவர்கள் வேலி யைத்தாண்ட முடியாது; வேலி ஒரத்திலேயே நடப்பர். இவ் வாறு பலரது நடத்தலையும் அறிவதால், இது, நடக்கை யறிவாள் எனப்பட்டது போலும்! சார்பு.

நடமிடுமீசன் நடம் இடும் ஈசன் = நடனம் ஆடும் சிவன். சிவனுக்கு உரியது சரக்கொன்றை; அதனால் இது "நடமிடுமீசன் ஆயிற்று, சார்பு.

நட்சத்திரக் காட்சி: வேங்கை மரத்தின் மலர்கள் பொன்னிறமாக மஞ்சள் நிறமாக இருக்கும். விண்மீன்களும் (நட்சத்திரங்களும்) இவ்வாறே காட்சி தருதலின், வேங்கை, 'நட்சத்திரக் காட்சி எனப்பட்டது வடிவம்.

நமனை விரட்டி: மார்க்கண்டேயனைப் பிடிக்க வந்த gTLD 6ở}6ốT (நமனை) உதைத்து விரட்டியவர் சிவன். அவர்