பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 55

நவக்கிரகத் தும்பை: இது மாறுதும்பை யாகும். நவக்கிரகம் எனப்படும் ஒன்பது கோள்களும், எப்போதும் நிலையாக ஒரே வீட்டில் இருப்பதில்லை. வீடு மாறிக் கொண்டே யிருப்பார்கள். அதுபோல, தன் வடிவை அடிக்கடி மாற்றும் மாறு தும்பை நவக்கிரகத் தும்பை எனப்பட்டது. வடிவம்.

நற்சேவகன் கோடாங் கிழங்கு என்னும் ஒரு வகைக் கிழங்கு, நல்ல சேவகன் போல் உதவு மாதலின் ஒப்புமை யால் நற்சேவகன் எனப்பட்டது.

நாக்கறுத்தான்: தர்ப்பைப் புல்லை நாக்கில் இட்டால், அது நாக்கையே அறுத்துப் புண்ணாக்கும் அளவுக்குச் சொர சொரப்பு உடையது. அதனால் இப்பெயர் பெற்றது. செயல்-பண்பு.

நாம தாரி = திருமால் நாம தாரியாவார். திருமா லின் தெய்வப்பிறப்பாகிய கண்ணனுக்கு மூங்கில் குழல் (புல்லாங்குழல்) ஆயிற்று. புல்லாங்குழல் = புல் - ஆம் - குழல்-புல்மர வகையைச் சேர்ந்த மூங்கிலால் ஆன ஊது குழல். மூங்கில் குழலை எண்ணும் போதே நாமதாரியாகிய கண்ணன் நினைவும் வரும். எனவே, மூங்கில் நாமதாரி எனப்பட்டது. இது, குழல் செய்ய உதவும் மூங்கில் வகை யாகும். சார்பு.

நாய்க்கடி போக்கி = நாய்க் கடுகு எண்ணும் ஒரு வகைக் கடுகு நாய்க்கடி நஞ்சைப் போக்குமாம். பயன்.

நாய் வணங்கி : குப்பை மேனிக்குப் பூனை வணங்கி என்னும் பெயர் உண்டு. அதுபோல, நாயுருவிப் பூடுக்கு

புரளும் போலும்! இதனால், நாயுருவிப் பூடு, நாய் வணங்கி யாயிற்று. சார்பு. நாய் இதில் உராய்வதுண்டு என்னும் கருத்துப்பட வேலூர் டாக்டர் கண்ணப்பர் எழுதியுள்ளார்.