பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 63

பாப்பாரக் கனி: பார்ப்பனர்கள் புடலங்காயைக் கறி சமைத்து உண்பர். மற்றவரினும் பார்ப்பனர் இதனை மிகுதியாக உண்பதால் பாப்பாரக் கனி எனப்பட்டது. சடங்கு செய்யும் ஐயருக்கு, அரிசி பருப்புடன், புடலங்காய் தருவது ஈண்டு நினைவு கூரற்பாலது. சார்பு.

பாலகனைக் காத்தான் : மணித் தக்காளி, மார்பில் கோழை கட்டுதல், இருமல் முதலிய நோய்களைப் போக்கி உயிர்நீட்டிக்கச் செய்யும். இதற்குப் பாலகனைக் காத்தான்' என்னும் பெயர் கொடுத்திருப்பதிலிருந்து, குழந்தைகட்குச் சளி, இருமல் வராமல் காக்கும் என அறியலாம். பயன்.

பாலடி: அடியில் பால் உடையதால் திருகு கள்ளி பாலடி எனப்பட்டது. உடற்கூறு.

பாவநாசனி வன்னிமரத்திற்குத் தீத்தெய்வம்'என்னும் ஒரு பெயர் இருப்பதாக முன்னர்க் கண்டோம். வன்னி சிவனுக்கு உரியதாதலின், மக்கள் வன்னிமரத்தைச் சுற்றி வந்து வணங்கினாலும், வன்னி இலையைக்கொண்டுசிவனை வழிபடினும் பாவம் நீங்குமாம்; ஆதலின் வன்னி பாவநாசணி எனப்பட்டது. பயன்.

பிசாசு போக்கி: காஞ்சிர (எட்டி) மரமும் வேப்ப மரம்போல் பிசாசைப் போக்கும் போலும்; அதனால் பிசாசு போக்கியாயிற்று, சார்பு.

பித்த சமனாக்கி= சிற்றிஞ்சங்காய் பித்தத்தை மிகுக்கா மலும் குறைக்காமலும் சமநிலையில் வைத்திருக்குமாதலின் இப்பெயர் பெற்றது. பயன்.

பித்த சிலேட்டும அக்கினி = பித்தம் தெரியும், சிலேட்டுமம் என்பது கோழை - சளி - இருமல் தொடர்பானது. ஆடா தோடை பித்த சிலேட்டுமத்தை அக்கினிபோல் சுட்டுப் போக்குமாதலின் இப்பெயர் பெற்றது. பயன். ஆடு