பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மர இனப் பெயர்கள்

தொடா இலை என்பது ஆடாதோடை எனப்படுகிறது. வேலியாக வைத்துள்ள பெரிய இலைகளையுடைய ஆடு தொடா இலைக்கு இந்த மருத்துவப் பயன் கிடையாது. சிறிய இலையுடைய ஆடுதொடா இலைதான் மருத்துவப் பயன் தருவது. (சித்த மருத்துவராகிய என் தந்தையார், சிறிய ஆடுதொடா இலைச் செடியை எங்கள் தோட்டத் தில் வைத்து வளர்த்து வந்தார்)

பித்த சுர நாசனி=கோரைக்கிழங்கும், முசுமுசுக்கையும் பித்தக்காய்ச்சலைப் போக்கும். பயன்.

பித்தசுர சமனி = பெருங்காஞ்சொறி செடி பித்தக்

காய்ச்சலைக் குணமாக்கும். பயன்.

பித்த நாசம்= பித்தம் போக்கும் முள்வெள்ளரி, பயன். பித்த நாசனி - பித்த பத்திரம் = பித்தம் போக்கும் சீரகத்திற்கு இப்பெயர்கள் உண்டு. பயன்.

பித்தமுறி மாதர் = பித்தத்தை முறிக்கும் எலுமிச்சம் பழம் இது. உள்ளுக்குக் கொடுப்பதல்லாமல், பித்த பைத்தியக்காரரின் தலையில் எலுமிச்சம் பழம் தேய்ப்பது நினைவுகூரத் தக்கது. பயன்.

பிராமண இஷ்டம் = கொட்டைப் பாக்குச் சீவலைப் பிராமணர்கள் இஷ்டப்பட்டு (விரும்பி) மிகுதியாகப் பயன் படுத்துவர் போலும்! இது பாக்குமரம். சார்பு.

பாஞ்சாலை = இது வாதநாராயணன் மரம். பாஞ்சாலம் என்பது ஒரு நாட்டைக் குறிப்பதன்றி, அழகிய தோற்றம்’ என்னும் பொருளையும் தரும். திரெளபதியைக் குறிக்கும் பாஞ்சாலி என்பது, அழகிய தோற்றமுடையவள், ஓவியப் பாவை, மரப்பாவை என்னும் பொருள்களையும் தரும். வாத நாராயண மரம் அழகிய தோற்றம் உடையதாதலின்