பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மர இனப் பெயர்கள்

' மருந்தை முறித்துவிடும்; வாய்வறளச் செய்யும்;

திருந்து பலவீனம் சேர்க்கும் - பொருந்து பித்தம் உண்டாக்கும்; விந்தழிக்கும்; ஒது புகையிலையைக் கண்டார்க்கும் ஆகாது காண்

புகையிலையைக் கண்டாலேயே கெடுதியாம். புகைத்தால் - பலவகையில் பயன்படுத்தினால் பெருங்கேடுகள் குழும். எனவே, புகையிலை பைத்தியங்காரி எனப்பட்டது. பயன். பைத்தியம்காரி = பைத்தியம் உண்டாக்குவது.

போகா நிழலி - நிழல் மரத்தினின்றும் சாயாமல் - வெளியே நிழல் விழாமல் இருப்பதால், சாயாமரம் போகா நிழலி எனப்பட்டது. உடற்கூறு.

போக்கு முலைச்சி = இது சிவகரந்தை. இஃது ஒரு குத்துச் செடியாகும். குத்து முலைபோல் இருப்பதால் இப்பெயர் வந்ததோ! வடிவம். முலைச்சி என்றும் பெயர் உண்டு.

பேசுங் கனி மாதர் = இது எலுமிச்சம் பழம். மந்திர வாதிகள் எலுமிச்சம் பழத்தைப் பேச வைக்க முடியும் என்று சொன்னதை யான் கேட்டிருக்கிறேன். இதை நம்ப முடியாது. மிகவும் அழகாக இருக்கும் அஃறிணைப் பொருளை, 'ஏன் என்றால் ஏன் என்று கேட்கும் - அப்ப டியே பேசும்’ என்று புனைந்துரையாகச் சிறப்பித்துச் சொல்வது மக்கள் வழக்கம். எலுமிச்சம் பழம் மிக்க அழகும் கவர்ச்சியும் உடையதாதலின், பேசுங்கனிமாதர் எனப் புனைந்துரைக்கப்பட்டது போலும்! சார்பு.

பேயோடாடி பேயோடு நடனம் ஆடினவர் சிவன். அதனால் அவர்க்கு உரித்தான பேயோடாடி என்னும் பெயர் சொல்விளையாட்டாகச் சிவகரந்தையைக் குறிக்கும்.