பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 71

மருந்தீடு முறியப்பண்ணி பூசணி மருந்தின் பயனை முறியப்பண்ணிவிடும். மகா அவுடத நாசனி காண்க பயன்.

மலத்தைத் தள்ளிச்சி கற்றாழை மலச் சிக்கலைப் போக்கும் - மலத்தை வெளித் தள்ளும். பயன்.

மந்த வைரி: இது சுக்கு. மந்தம்= வயிறு பசியாமை. வைரி = பகைவன். சுக்கு மந்தத்தின் பகைவனாம். பாடல்கள்:

அ.கு.பா.

சூலை மந்தம் நெஞ்செரிப்பு தோடம் ஏப்பம் அழலை

மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் - வாலகப தோடம் அதிசாரம் தொடர்வாத குன்ம நீர்த் தோடம் ஆமம் போக்கும் சுக்கு" -

தேரன் வென்பா:

ஒடுமே மந்தம் ஒளியாமல் நாடகன்று

காடுதனில் போகிவிடுங் காண்' -

சுக்கு, மந்தம் - நெஞ்செரிப்பு - புளியேப்பம் முதலியன போக்கிப் பசிக்கச் செய்யும் என அ.கு.பா. கூறுகிறது. தேரன் வெண்பாவோ, சுக்கினால், மந்தம் நாட்டை விட்டுக் காட்டுக்கு ஓடிவிடும் என உயிருள்ளதுபோல் உருவகித்துச் சொல்லியுள்ளது. எனவே, சுக்கு மந்த வைரி தானே! பயன்.

மலையரசன்: மலைப் பகுதியில் மிளகு விளைவதால் மலையரசன் எனப்பட்டது. இடம்.

மலையாளம்: மலையாளத்தில் மிளகு நிரம்ப விளை வதால் 'மலையாளம்’ எனப்பட்டது. இடம்.