பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மர இனப் பெயர்கள்

மாதோஷம் நீக்கி = புளியாரைக் கீரை, பலவகை உடற் குற்றங்களைப் போக்கும். பயன்.

மாமறையோன். சிவன் மறையை அருளியதால் மாமறையோன் எனப்பட்டார். ஈசுரன் = சிவன். எனவே, ஈசுரமூலி என்னும் கொடி, சொல் விளையாட்டாக மாமறை யோன் எனப்பட்டது.

மாமிச பலா = தற் பூசினி என்னும் ஒருவகைப் பூசினிப் பழம், பார்ப்பதற்குப் பலாப் பழம்போல் இருக் கும். பலாப்பழத்துள் நார், சக்கை, கொட்டை, சுளை, கோது ஆகியவை இருக்கும். பூசினிப்பழத்துக்குள் இருப்பது முழுதும் மாமிசமாகிய தசைப் பகுதியே. அதனால் இது மாமிச பலா எனப்பட்டது போலும்! வடிவம்.

மாருசி = மிக்க சுவை (ருசி) தருவது மிளகு, பயன்.

மாருதத்தைப் போக்கி; புனம் புளி என்னும் வகைப் புளி, வாயுவைப் போக்கும். மாருதம் = காற்று = வாயுவு. பயன்.

மால்தாயம்: கரு நெய்தல், நிறத்தால் திருமாலின் தாயம் (சார்பு) உடைத்தாதலின் மால்தாயம் எனப் பட்டது. நிறம்.

மானேந்திமூலி: கையில் மான் ஏந்திக்கொண்டிருப்பவர் ஈசுரனாகிய சிவன். எனவே, சொல் விளையாட்டாக ஈசுர மூலிக்கொடி இப்பெயர்த் தாயிற்று.

மிருது புட்பி = மென்மையான பூக்களை உடைமை யால் ஒதிய மரம் இப்பெயர்த் தாயிற்று. வடிவம்.

முக தானியம்: மொச்சைக் கொட்டையில் முகம் போன்ற ஓர் உறுப்பு முன்னால் இருப்பதால், மொச்சை முக தானியம் என்னும் பெயர்த்து. வடிவம்.