பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மர இனப் பெயர்கள்

மால் கொடை திருமாலின் பெயரால் கொடுக்கப்படும் தூய பொருளாதலின் துளசி மால் கொடையாயிற்று. சார்பு.

மால் மைத்துனன்: தி ரு மா லி ன் தங்கை உமை. உமையின் கணவன் சிவன்; எனவே, மாலின் மைத்துனன் சிவனாவார். இப்பெயர் சொல்விளையாட்டாகச் சிவனார்

வேம்பைக் குறிக்கிறது.

முக்கடுகம்: சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று பொருள்கள் திரிகடுகம் எனப்படும். திரி என்பது வடமொழிச் சொல். இப்பெயர் தூய தமிழில் முக்கடுகம் எனப்படும். மொழி பெயர்ப்பு.

முகிழ் அரும்பு: மொக்காகவே இருக்கும் அரும்பு. அத்தி, ஆல், அரசு, அன்னாசி, பலா ஆகியவை மலராமல் மொக்காகவே - அரும்பாகவே இருக்கும் மலர்ப்பகுதியை உடையவை. இப்பெயர் சினையாகு பெயராக, அத்தி, ஆல், அரசு, அன்னாசி, பலா ஆகியவற்றைக் குறிக்கும். வடிவம்.

முடியில் தரித்தான் = சிவன் சரக் கொன்றையை முடியில் தரித்திருப்பதால், சரக்கொன்றை இப்பெயர் பெற்றது. சார்பு.

முடிவேர்: முடி என்பது உச்சி; வேர் என்பது அடி. இச்சொற்களின் இணைப்பு வியப்பாயுள்ளது. வெட்டி வேரைப் பெண்டிர் தலையில் சூடுவர். வெட்டிவேர் எண்ணெயைத் தலைமுடியில் தேய்ப்பதும் உண்டு. எனவே, வெட்டிவேர் முடிவேர் எனப்பட்டது. பயன்.

முண்டக நாயகம், முண்டகம் = தாமரை. தாமரை மலர ஞாயிறு நாயகமாக இருப்பதால் ஞாயிறுக்கு முண்டக நாயகம் எனும் பெயர் ஏற்பட்டது. முண்டக நாயகமாகிய

ஞாயிறை நோக்கிச் சூரியகாந்தி திரும்புவதால், சூரிய