பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மர இனப் பெயர்கள்

மூவிலைச்சி = மூன்று இலைக் கொத்துடையது வில்வம்; அதாவது, மூன்று சிறு இலைகள் உள்ள கூட்டிலைகளை உடையது வில்வம். வடிவம்.

மூவிலை மின்னி = மூன்றிலைத் தோற்றத்துடன் மின்னுவது (விளங்குவது) அவரை வடிவம்,

மேக சத்துரு-மேகாரி: இது ஆவாரை, மேகம் என்பது மேகநீர் என்னும் ஒருவகை நோய் ஆவாரை இதற்குப் பகையாகி இந்நோயைப் போக்கும். பாடல்கள்:

தேரையர் குண பாடம்:

' சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீர் எல்லாம் ஒழிக்கும்; எரிவகற்றும்; மெல்லவச மாவாரைப் பம்பரம்போல் ஆட்டுந் தொழிலணங்கே ஆவாரை மூலி யது'.

அகத்தியர் குண பாடம்:

' பெரு நீர் மறிக்கும்; பிரமேகம் போக்கும்;

வருநீர்ச் சுருக்குதனை மாற்றும் - தருநீர்மை பூணு மேனிக் கமலப் பொன்னே! பிடகரெலாம் பேணு மேகாரிப் பிசின்’

ஆவாரைக்கு அகத்தியர் குணபாடப் பாடலில் மேகாரி' என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருப்பது காண்க. மேக-அரி = மேகாரி, மேக நோயை அரிப்பது-அழிப்பது மேகாரி. முர + அரி= முராரி, முரன் என்னும் அரக்கனை அழித்ததால் திருமால் முராரி எனப்பட்டார். முராரிபோல் மேகாரி என்பதையும் பிரித்துப் பொருள் காண்க. பயன்.

மேக நிறத்தி : கரு நெல்லி மேகம்போல் கருமையா யிருத்தலின் மேக நிறத்தி எனப்பட்டது. நிறம்.