பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மர இனப் பெயர்கள்

பட்டது. சிறியோர் பெரியோரைக் காணச்செல்லுங்கால், இக்கனியைக் கொண்டுபோய்த் தந்து சிறப்பு செய்வது ஒரு வகை மரபு. எனவே இதனை இராச கனி எனலாம். தலைமை.

உருத்திரம்: சிவன் உருத்திரன் எனப்படுவார். எனவே சொல் விளையாட்டாக, சிவனார் வேம்பு உருத்திரன் எனப்பட்டது.

இலௌகிகம்: இது சந்தனம், இலெளகிகம் என்பது உலகப்பெரு வழக்கு என்னும் பொருள் உடையது. சந்தனம், சிறப்பு நிகழ்ச்சிகளில் எல்லாம் பெரு வழக்காகப் பயன்படுவதால் இலெளகிகம் எனப்பட்டது. சார்பு. பயன்.

வசந்த புட்பம்: வேங்கை மரம் வசந்த (இளவேனில்) காலத்தில் மலர்வதால் இப்பெயர்த்து. காலம்.

வசியக் கனி: சிறிது நீண்டு உ ரு ண் டி ரு க் கு ம் ஆதொண்டைப்பழம் காண்பதற்குக் கவர்ச்சியாயிருப்பதால் வசியக் கனி எனப்பட்டது. வடிவம்.

வஞ்சியர் மயக்கி: வஞ்சியர்=பெண்டிர். பெருந் தும்பை பெண்டிரை மயக்குவதால் இப்பெயர்த்து. சார்பு.

வடமாது புளியமரம் வடமாது எனப்பட்டுள்ளது. காரணம் தெளிவில்லை. தமிழ்நாட்டின் வடக்கேயிருந்து வந்ததோ! தமிழ் நாட்டின் வடக்கேயுள்ள ஆந்திர நாட்டார் புளி - காரம் மிகுதியாய் உண்பர் என்னும் ஒரு கருத்து கருதத்தக்கது. இடம்.

மற்றொரு பெயர்க் காரணமும் கூறலாம்: ஒருவர் செல்வாக்கு மிக்க பெரியார் ஒருவரைச் சார்ந்து நின்றால், "புளியங் கொம்பாகப் பார்த்துப் பிடித்துவிட்டார்’ எனல் உலக வழக்கு. வேறு மரங்களின் சிறு கிளைகளைப் பிடித்து ஏறினால் அவை ஒடிந்துவிடும். ஆனால் புளியஞ் சிம்பை