பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 85

வாத சுர நாசனி = வாயுவுக்கும் காய்ச்சலுக்கும் அரைக்கீரை நல்லது. காய்ச்சல் அடிக்கும்போது அரைக் கீரையை உண்ணாவிடினும், காய்ச்சல் நின்றதும் உடலைத் தேற்ற உண்ணலாம் பயன்.

வாதம் அறுக்கின்றோன்: மிளகு வாயுவை அறவே அறுத்துப் போக்குதலின் இப்பெயர்த்து. பயன். பாடல்கள்: அகத்தியர் குண பாடம்:

“ அளவையுறாக் காரம் அடைந்திருக்கும் வாத

விளைவையெல்லாம் அறுக்கும் மெய்யே -

மிளகின் காய்'

வாதம் அருசி பித்தம் மாமூலம்......

நாசம் கறிமிளகி னால்’

தேரையர் குணபாடம் :

' கோணுகின்ற பங்கவலி குய்ய வுரோகம்வாதம்...

ஏதுநோய் காயிருக்கில் ஈங்கு” தேரன் வெண்பா:

'போம் திமிர் வாதம்கிரந்தி புண்ணிரும் மண்ணவர்க்கும்

காந்திமெய் வாதச் சலுப்பைக்காய்'

மிளகு வாதம் அறுக்கும் என்பதற்கு மேலும் சான்று வேண்டுமா என்ன !

வாதாடு காளி; காளி சிவனோடு வாதாடியதால் வாதாடு காளி எனப்பட்டாள். காளியின் இப்பெயர் சொல் விளையாட்டாக மணித்தக்காளிக்கும் வைக்கப்பட்டது. மணித்தக்காளி என்பதன் இறுதியில் காளி என்னும் பகுதி இருக்கின்றதல்லவா?

வாந்திசுர நாசணி : வெட்டிவேர், வாந்தியையும் காய்ச்சலையும் போக்கப் பயன்படுமாதலின் இப்பெயர்த்து. பயன்.