பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றுகளுடனும் இலக்கிய மேற்கோள்களுடனும் விளக்கி யுள்ளேன். சிலவற்றின் பெயர்க் காரணங்களை நெடுநேரம் எண்ணிப் (சிந்தித்துப்) பார்த்து, என் உய்த்துணர்வாலும் சொந்தக் கற்பனையாலும் சொந்தப் பட்டறிவாலும் விளக்கியுள்ளேன். இது சார்பாகச் சிலருக்குக் கருத்து வேற்றுமை ஏற்படலாம். சில பெயர்க் காரணங்கள் வலிந்து கூறப்பட்டிருப்பதாகத் தோன்றலாம். யான் கூறியனவே முடிந்த முடிபாக மாட்டா. சில செய்திகள் பொருந்தாதன போல் தோன்றின், ஆராய்ச்சியாளர்கள் மேலும் மறு ஆய்வு செய்து கருத்து வெளியிடலாம். வடமொழிப் பெயர்கள்

தமிழ் நூல்களில் வடமொழிப் பெயர்கள் மிகுதியாகக் கலந்திருப்பதால், அப்பெயர்களின் பொருள் புரிந்தால்தான் நூல்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமாதலின், இவ்வெளியீட்டில் வடமொழிப் பெயர்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. தொடாபு:

இந்நூலில் இடம் பெற்றுள்ள மர இனப் பொருள் கட்கு, சார்பு, பண்பு, பயன், உடற்கூறு, வடிவம், நிறம், வண்ணம், செயல், மொழி பெயர்ப்பு, சொல் விளையாட்டு, ஒப்புமை முதலிய பல தொடர்புகளால் புனை பெயர்கள் வைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பெயர்க் காரண விளக் கத்தின் இறுதியிலும், இந்தத் தொடர்புகளுள் அதற்குரியது குறிப்பிடப்பட்டிருக்கும். நூல் பயன்

இந்த நூலில் உள்ள பெரும்பாலான பெயர்கள் தமிழ் - சித்த மருத்துவத் தொடர்பு உடையவை. பெயர் விளக்கங்களில், உடலுக்கு உண்டாகும் பயன்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவப் பயன்களை யானாகக் குறிப்பிடவில்லை. சித்தர்களும் மருத்துவ அறிஞர்களும் அறிவித்துள்ள பயன்களையே யான் குறிப்பிட்டுள்ளேன். சில பெயர்கள் இயற்கையாகவே - தம்மில் தாமே மருத்து