பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மர இனப் பெயர்கள்

மரம், எருது கன்னிமரம் எனச் சொல் விளையாட்டாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உயிர் காப்பாற்று மூலி = சஞ்சீவி உயிர் காப்பாற்று மாதலின் இப்பெயர்த் தாயிற்று. பயன்.

ஆடிய கூத்தன் மரம்: சிவன் தில்லையாகிய சிதம்பரத் தில் கூத்து ஆடுபவர். எனவே, தில்லைமரம், ஆடிய கூத்தன் மரம் எனச் சார்பால் பெயர் பெற்றது.

ஆள் மறித்தான் புல்: இது இராவணன் மீசைப்புல்லின் பெயர். கத்தையாக வைத்திருக்கும் மீசையைத் துடைப்பக் கட்டை மீசை எனல் உலகியல், கடற்கரையில், மீசை நெருக்கமாக நீட்டிக்கொண்டிருப்பது போல் ஒருவகைப்புல் அ. ர்ந்து நெருங்கி நீட்டிக்கொண்டுள்ளது. அரக்கனாகிய இராவணனுக்கு மீசை இருந்தால் எப்படியிருக்குமோ - அப்படி இது இருப்பதால், இதற்கு இராவணன் மீசைப்புல் என்று பெயர் தரப்பட்டது. இது, நடந்துசெல்லும் ஆள்களை நடக்கவொட்டாமல் தடுத்து மறிப்பதுபோல் இடையூறாக இருப்பதால், ஆள் மறித்தான் புல்” என்னும் பெயரும் பெற்றது. .

இராம பத்தினி = இராமன் பத்தினி (மனைவி) சீதை. எனவே, சீதா செங்கழுநீர்க் கொடி, சொல்விளையாட்டாக இராம பத்தினி எனப்பட்டது.

இராமன் தேவி = இராமன் தேவியாகிய சீதைக்குச் சானகி என்னும் பெயரும் உண்டு. எனவே, சானகிப் பூண்டு, சொல்விளையாட்டாக இராமன் தேவி எனப்பட்டது.

கபமறுக்குங் குடோரி = யானைத் திப்பிலி என்னும்

கொடியின் பெயர் இது. கபத்தை (ஐயத்தை) அறுத்துப் போக்கும் படைக்கலம் (குடோரி) போன்று இருப்பதால்,