பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 93

இது கபமறுக்கும் குடோரி எனப்பட்டது. பயன். பாடல்அகத்தியர் குணபாடம்: -

'வாதமறும் தீபனமாம் மாறாக் கபம் கரப்பான்... .

ஒடும் ... யானையினல் திப்பிலியதால்”

கிழவன் தாடிப் பூண்டு = இது பனி தாங்கிப் பூடு ஆகும். இந்தப் பூண்டின்மேல் பணி நீடித்திருக்கும். பனி வெண்ணிற மானது. கிழவன் தாடியும் நரைத்து வெண்ணிறமாயிருக் கும். எனவே, பனிதாங்கிப் பூடு கிழவன் தாடிபோல் இருக்குமாதலின், கிழவன் தாடிப் பூண்டு எனப்பட்டது. ஒப்புமை.

கீரைச் சிறுமி = சிறுகீரை சொல்விளையாட்டாகக் 'கீரைச் சிறுமி எனப்பட்டது. சிறு = சிறுமி.

குஞ்சர மயக்கி = குஞ்சரம் = யானை. யானையை வனங்கச் செய்வதால், யானை வணங்கிச் செடி, குஞ்சர மயக்கி எனப்பட்டது. நெருஞ்சி, முள்ளால் தைத்து யானையைத் துன்புறுத்துவதால், நெருஞ்சியின் பெயராக இருக்கவேண்டும் இது.

குளிர் காந்திக் கொடி = சந்திர காந்திச் செடி இது. பகலில் சூரியனை நோக்கும் சூரியகாந்திபோல், குளிர்ந்த இரவில் சந்திரனை (திங்களை) நோக்கும் சந்திரகாந்தி, குளிர் காந்திச் செடி எனப்பட்டது. சார்பு.

சந்திர காந்திப் பூ - இரவில் மலரும் அல்லி. சார்பு. சவுபாக்கியம் - சவுபாக்கியம் = செல்வம், நலம். கக்கு உடம்புக்குப் பெருஞ் செல்வம்போல் இருந்து நலம் பயப்ப தால் சவுபாக்கியம் எனப்பட்டது. பயன்.

சிரப் பலம் = சிரம் = உச்சி; பலம் = காய், கணி. தென்னைமரத்தில் உச்சியில் காய் காப்ப்பதால், சினையாகு பெயராகத் தென்னை சிரப்பலம் எனப்பட்டது. வடிவம்.