பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மர இனப் பெயர்கள்

سس--

வாழ்த்துகின்றனர். எனவே பசும்புல் என்பது, குறிப்பாக. சிறப்பாக அறுகம் பல்லைக் குறிக்கும் எனலாம்.

பத்தியக்காரிக் கீரை = சிறுகீரை உடலுக்கு நல்லது; வலிமை தருவது; பத்தியம் பிடிப்பவர்கள் உண்ணத்தக்கது; அதனால் பத்தியக் காரிக்கீரை எனப்பட்டது. சார்பு.

பல தேசிகக்கனி = ஆரஞ்சுப்பழம் இது. இது, பல தேசங் களிலும் "ஆரஞ்சு என்னும் சொல் ஒலிப்போடு ஒத்த சொல் ஒலிப்புடையதாய்ப் பயன்பட்டு வருவதால் பல தேசிகக் கனி எனப்பட்டது. சார்பு.

பழம் பேசி = நெருஞ்சிலில் செப்பு நெருஞ்சில் என ஒரு வகை உண்டு. நெருஞ்சிமுள் என்பது நெஞ்சிப் பழமாகும். செப்புதல் என்றால் பேசுதல்; எனவே, செப்பு நெருஞ்சிப் பழம், சொல் விளையாட்டாகப் பழம்பேசி எனப்பட்டது.

பறவை வேந்தன் கொடி=பறவை வேந்தன்=கருடன். எனவே, கருடன் கொடி என்னும் மர இனம் சொல் விளையாட்டாகப் பறவை வேந்தன் கொடி எனப்பட்டது.

பனிப் பகைச் செடி. பனிக்குப் பகை ஞாயிறு (சூரியன்). எனவே, பனிப்பகையாகிய ஞாயிறை நோக்கும் சூரிய காந்திச்செடி பனிப் பகைச் செடி எனப்பட்டது. சார்பு.

பன்றி குறும்புக் கிழங்கு - பன்றி தோன்றிப் பூடு: கோரைக் கிழங்கைப் பன்றி தோண்டித் தின்பதால், கோரைக் கிழங்கு இப்பெயர்கள் பெற்றது. சார்பு.

பாம்பு கொல்லிப் பூண்டு: கீரி பாம்பைக் கொல்லும். பாம்பைக் கொன்ற கீரி, தற்காப்புக்காக, நச்சுப் போக் கும் ஒரு பூண்டின்மேல் புரளும். அது தான் கீரிப்பூண்டு. இதுதான் பாம்பு கொல்லிப்பூண்டு. சார்பு,