பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடேறிக் குடிமுடித்த படலம்

107

வீடு போக்கிடுது, வேளைவர வில்லை?
கூனக் கிழவன் கோர்ட்டு வழக்கில்
என்ன அறிவான்? இவன்பேச் சையும் ஒரு
காரிய மாகக் கருதிட லாமோ?
செல்வமும் கல்வியும் செழித்த நாட்டில், 415
வியாபா ரங்கள் மிகுந்த நாட்டில்,
உழைப்புகள் பற்பல ஓங்கிய நாட்டில்,
வழக்குகள் நிதமும் வளர்ந்து வருவது
சகஜம் என்று ஸ்தாபித்திட நான்
‘அத்தா ரிட்டிகள்’[1] ஆயிரம் காட்டுவேன். 420
அண்டப் புரட்டன் வக்கீல், என்ன
ஆளைத் தூக்கி விழுங்கிடு வாரோ?
இவர்வீச் செல்லாம் யாரிடம் செல்லும்?
ஏழை, பாவம், யாவ ரேனும்
வந்தால், கொஞ்சம் வாலை முறுக்குவார்; 425
அன்றி,
பதிவு சாக்ஷிப்[2] பலவேசம் பிள்ளை[3]
கூட்டா ளிகளைக் கூட்டிற் கண்டால்,
வாயைத் திறவார், மௌனம் கொள்வார்;


  1. 420. அத்தாரிட்டி - அத்தாட்சி, ஆதாரம்.
  2. 427. பதிவு சாக்ஷி: லஞ்சம் வாங்கிக்கொண்டு முன் பின் தெரியாத எந்தப் பத்திரத்திலும் சாக்ஷிக் கையெழுத்துப் போடவும் சாக்ஷி சொல்லவும் தயாராயிருப்பவன்.
  3. பலவேசம் பிள்ளை: இப்பெயரைப் 'பலவேஷம் பிள்ளை'
    எனக் கொள்ள வேண்டும்; இவர், லஞ்சம் பெற்றுக்கொண்டு
    யார் யாருக்கு எந்த எந்த விதமாகச் சாட்சியம் சொல்ல
    வேண்டுமோ அந்தந்த விதமாகக் கோர்ட்டில் சொல்லத்
    துணிந்திருப்பவர் என்பது கருத்து.