இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112
மருமக்கள்வழி மான்மியம்
வேறு
குலக்குறத்தி வரினுமொரு
கோடங்கி வரினும்
குறிகேட்டுப் பொருள்விரித்துக்
கொண்டிருந்தோம். அம்மா![1]
துலக்கமுறப் பரல் பரத்திச்
சோசியர்கள் கணித்துச்
சொன்னவைகள் உண்றை யென்று
துணிந்திருந்தோம், அம்மா!
1
பதியிருக்கும் பதியெங்கும்
பதிவாகச் சென்று
பால்வைத்துக் கணக்குகளும்
பார்த்து வந்தோம்,[2] அம்மா!
கதிகிடைக்கும் எனக்காளி
கொடை நடக்கும் காலம்
கடாத்தறித்துப்[3] பொங்கலிட்டுக்
காத்திருந்தோம், அம்மா!
2
குறத்திசொன்ன குறியெல்லாம்
குறிதவறிப் போச்சே!
கோடங்கி[4] குறியாலும்
குணமில்லா தாச்சே!
- ↑ 1. அம்மா: விளி; இவ்வரலாற்றைச் சொல்லிவரும் பெண் மற்றொரு பெண்ணை அம்மா என விளித்துக் கூறுகிறாள்.
- ↑ 2, 4. நாராயணசாமி பதிகள் அல்லது கோயில்களை
நாஞ்சில் நாட்டிலுள்ள பல ஊர்களிலும் காணலாம். அப்
பதிகளில் சிறப்பு நடத்துவதற்குப் 'பால் வைத்தல்' என்று
பெயர். பதி கொண்டாடி சன்னதம் கொண்டு அடிமைகளுக்கு வருங்காரியம் கூறுவது 'கணக்குப் பார்த்தல்' எனப்படும். - ↑ 2. கடாத் தறித்து - கடாவைப் பலியிட்டு
- ↑ கோடங்கி - குடுகுடுப்பைக்காரன்.