பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. கும்பியெரிச்சல் படலம்


................
................[1]
தீரா வழக்கும் சென்மப் பகையும் 15
உற்ற ருக்குள் உண்டாக்கும் வழி
அப்பனைப் பிள்ளை அண்டவொட்டாவழி
பிள்ளையை அப்பன் பேணவொட்டாவழி
புருஷனை மனைவி போற்றவொட் டாவழி
மனைவியைப் புருஷன் மதிக்கவொட் டாவழி 20
அண்ணனைத் தம்பி அடுக்கவொட்டாவழி
தம்பியை அண்ணன் தரிக்கவொட் டாவழி
மருகனை மாமன் வஞ்சித் திடுவழி
மாமனை மருமகன் வதைத்துக் கொலும்வழி
குடியை முடிக்கும் கொடிய தீவழி 25
அடிபிடி சண்டை அகலாப் பெருவழி
மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி;
எண்ணும் படியுடல் என்பெலாந் தெரியக்
கண்ணும் குழிந்து கன்னமும் ஒட்டி
வயிற்றுக் கின்றி வறுமையின் மெலிந்து, 30
என்போல்
நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி;


  1. 1-14. ஏட்டில் பொடிவு.