பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்பியெரிச்சல் படலம்

127

கஞ்சிப் புரையே கதியெனக் சென்று,[1]
பக்க மெங்கும் பரந்து சுற்றிச்
சுவான தேவர்[2] துதித்து நிற்க,
அந்தரம் எங்கும் பந்தர் போட்டுக்
காக்கைபா டினியர்[3] கானம் பாட 80
பழஅடி யார்கள் பலரோடும் கூடி
வெட்ட வெளியில் வெண்சோ றுண்டு,
பட்டைச் சோறும் பாற்சோ றாக
ஒட்டுத் திண்ணை உறங்கிட மாக
இருப்பதை நோக்கி இரங்கி,இரங்கி, 85
இழந்தை எண்ணி ஏங்கி ஏங்கி,
அழுபவர் கண்ணீர் ஆறாய்ப் போம் வழி—
ஐயோ, இவ்வழி ஆகாது ஆகாது!
ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி-
மனிதர் செல்லும் வழியா யிடுமோ?
................
................[4]
கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!! 95


  1. 77-88, ஏழை மக்கள் கும்பலாகக் கூடியிருந்து கஞ்சி குடிக்கும்போது, நாய்களும் காகங்களும் சுற்றி வட்டமிடுவது
    இவ்வரிகளில் குறிப்பிடப்படுகிறது.
  2. 78. சுவானதேவர் - நாய்கள்.
  3. 80. காக்கை பாடினியர் - ஒரு பழம் புலவர் பெயர்; இங்கே காகங்கள்.
  4. 91-2. ஏட்டில் பொடிவு.