பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

23

இந்நோக்கத்தை முதன்முதற் கையாண்டவர் எனக் கூறுகிறார்கள். இகழ்ச்சிக் கண்டனம் ஒருவரைக் குறித்துத் தோன்றாது ஓரினத்தவரைக் குறித்து எழுமாயின், அதனால் விளையும் நன்மை மிகப் பலவாதற்கு இடமுண்டு. இனம்பற்றியெழும் இகழ்ச்சியுரையின் தோற்றுவாய் 'ஹோமர்' என்ற கிரேக்க மகா கவியின் சிருஷ்டிகளில் காணப்படுகிறதென்பர். கம்ப-ராமாயணத்தில் அது வெளிப்படும் திறம் கவனிக்கத்தக்கது. இராவணன் முதலிய அரக்கர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் இந்திரன் முதலிய தேவர்கள். இத் தேவர்களின் ஏழைமை நிலை பல இடங்களிலும் வெளிப்படுகிறது. இலங்கையைச் சூழ்ந்திருந்த பொழிலுக்கு இவர்கள் காவற்காரரா யிருந்தனர். அப்பொழில் அழிந்ததைப் பற்றியும் பஞ்ச சேனாதிபதிகள். அக்ஷய குமாரன் முதலானவர்களின் வதத்தைப் பற்றியும் இராவணனுக்கு அறிவிக்கும் பொறுப்பு இவ் ஏழைத் தேவர்களுக்கு ஏற்பட்டது. இராவணன் சமூகத்திற்கு அவர்கள் உள்ளம் பறைகொட்ட நடுநடுங்கி வருதலும், அவனிடம் சொல்லுவதற்கு அஞ்சித் தடுமாறும் நிலைமையும், நகைச்சுவைபட, இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற, வருணிக்கப்படுகின்றன. அடிமை வாழ்வின்மீது ஏற்படும் அருவருப்பு தேவஜாதியாரின்மீது ஏற்றி யுணர்த்தப்படுகிறது. இதனால் விளையும் சுவையும் பயனும் பெரிதும் போற்றத்தக்கவை.

இராமாயணத்தில் வருவது பழங்காலச் சரித்திரத்தில் ஓர் ஆழ்ந்த உண்மை. ஓர் ஆசிரியன் தன்