பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மருமக்கள்வழி மான்மியம்

எச்சிற்சோற்றுக்குச் சக்களத்திகள் செய்த சச்சரவு: இவையெல்லாம் மழையிருளும் மின்னலும் போல மாறிமாறிக் காட்சியளிக்கின்றன. காரணவனாகிய தன் கணவனை மருமகனான அவகாசி பழித்து வைகிறான். இங்கே,

ஆரைக் கேட்டுநீர் ஐந்து கலியாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர் ஐயா?
பட்டப் பெயரும் பஞ்ச கலியாணிப்
பிள்ளை யென்றுநீர் பெற்று விட்டீரே

என்று மருமகன் கூறுவது நகைச்சுவையின் பேரெல்லையைத் தொட்டுவிடுகிறது. மருமகனுக்கு விடையாகக் காரணவன் தனது ஸ்தானத்தின் கௌரவமும் குடும்பத்தின் பெருமையுந் தோன்றச் சொல்லும் சொற்கள் மிகவும் சுவைபொருந்தியவை. ஆலடிமாடன் கொடை, அதில் காரணவன் ‘கணிச்மாக’ அலங்கார உடை தரித்து ஆடுதல், இழவு ‘அடியந்திரம்‘, கோயில்களில் குடும்ப கௌரவத்திற்காக ஏற்படுத்தும் கட்டளைகள், சானல் வாச்சர் (Channel Watcher) சந்தனத் தேவருக்கு ‘அட்ரஸ்‘ கொடுத்தல். மருமகன் ஏழு வருஷமாய் இங்கிலீஷ் படித்து ஏ. பி. ஸி. டி எழுதத் தெரியாமலிருத்தல், மருமகன் ராஜா திருவிளையாடல்கள் இவைகளெல்லாம் நினைக்குந்தோறும் நம்மை விளாவொடியச் சிரிக்கச்செய்கின்றன. மருமகனது தந்தை வீரபத்திர பிள்ளை வந்து அவன் மகனுக்காகச் சண்டையிட்டு

லைய வைய வைரக்கல்லும்
திட்டத் திட்டத் திண்டுக்கல்லும்

ஆகத் தன் கணவர் இருந்த காட்சி பார்ப்போருக்கு நகைக்கிடமாகவும் அவளுக்கு ஆற்றொணாத் துயரத்-