பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

33

தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
பொய்வழிப் பொருளைப் போக்கும்இந் நிலத்தில்
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!

என்று கதறி ஓலமிடுகிறாள் நமது கதா நாயகி.

IV

இப்புதிய கண்ணகியின் ஓலம் வீணாகிப்போய் விடுமா? நாஞ்சினாட்டுப் பெருமக்கள் காதைத் துளைத்துவிட்டது. அவர்கள் இதயக்கோட்டையைத் தாக்கித் தகர்த்துவிட்டது. அவர்கள் குடும்பம் மேன்மை யடைவதற்குரிய சீர்திருத்த மசோதா கொல்லம் ஆண்டு 1101-ல் (1926) சட்டசபையில் நிறைவேறி 1102-ல் அமுலுக்கு வந்தது. இம் மான்மியமே சீர்திருத்தத்திற்குக் காரணமாயிருந்தது.

இம்மான்மியம் திருவனந்தபுரத்திலிருந்து முன் பிரசுரிக்கப்பட்டு வந்த ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் 1917-ம் வருஷம் மார்ச்சு மாதம் தொடங்கிப் பகுதி பகுதியாக வெளிவந்து கொண்டிருந்தது. 1918 பெப்ருவரியோடு முற்றுப்பெற்றது. அக்காலத்தில் அப்பத்திரிகையின் ஆசிரியராயிருந்தவர்கள் பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளையவர்களும் திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரி மலையாளப் பேராசிரியர் சி. என். ஏ. அனந்தராமைய சாஸ்திரிகளும் ஆவார்கள்.

பத்திரிகையில் ஆசிரியர் பெயரோடு மான்மியம் வெளிவரவில்லை. பழைய ஏட்டுச் சுவடியில் இருந்த நூலை அச்சிற் பதிப்பிக்கிற பாவனையிலே வெளியாகிக்கொண்டிருந்தது. ஆசிரியர் பெயர் காணப் பெறாவிட்டாலும், பழய நூல் என்ற தோற்றத்

ம.மா.-3