பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவையடக்கம்

அருந்தமிழ் அகத்தியன் ஆராய்ந் திடவும்
கேள்வியிற் பெரியநக் கீரன் கேட்கவும்
கல்வியிற் பெரியனாம் கம்பன் காணவும்
இயற்றிய நூலிதென் றெண்ணவும் படுமோ?
மருமக் கள்வழி யென்னும் வனத்தில் 5
புலிகள் சூழுமோர் புல்வாய்[1] போல
வலையிற் படுமோர் மணிப்புறாப் போல
கொள்கொம் பற்றுத் துவள்கொடி போல.
ஒருத்தி ஏழை ஒருதுணை யில்லாள்
தானும் மக்களும் தமிய ராகிப் 10
பொறியும் கலங்கிப் போதமும் கெட்டுப்
புலம்பும் பொழுது, புண்ணிய சீலரே!
தொல்காப் பியமுதல் பல்காப் பியங்களும்[2]
கற்றுத் தெளிந்த கவிவல் லோரே!
விகாரம் முற்றும் விரவி வருமலால் 15


  1. 6. புல்வாய் - மான் வகையில் ஒன்று.
  2. 13. தொல்காப்பியம் : தமிழிலுள்ள பழைய ஓர் இலக்கண நூல்; இதனைச் செய்தவர் தொல்காப்பியர்.
    பல்காப்பியம்: பல காவியம். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பரரமரயணம் முதலிய பெருங் காவியங்கள்.