மாமி அரசியற் படலம்
47
கண்டாங் கிகளைக்[1] கண்டதே யில்லை.
அடுக்களை நடையே நிலைய யாயினும்
20
அங்கும் இங்கும் ஆக அவ்வீடு
எங்கும் இருப்பாள் எங்கள் மாமி.
இவளொரு கண்ணுக் கிணை அவ் இந்திரன்
ஆயிரம் கண்ணும் ஆகா துண்மை.
பின்னே நோக்கினும் முன்னுள தறியும்;
25
முன்னே நோக்கினும் பின்னுள தறியும்;
எறும்பும் காணா இடத்திவள் கண்போம்;
புகையும் நுழையா இடத்திவள் புத்திபோம்.
ஆணாய்ப் பிறந்தால் அகிலம் ஆளுவாள்;
இருகண் இருப்பின் இடமிது போதுமோ?
30
எல்லாம் வல்ல எம்பெரு மான்இவள்
குணத்தை அறிந்தே கொடுத்தான் ஒருகண்.
கணகண என்றெக் கணமும் நாக்கின்
அடிக்கும் மணிவிசை அடங்கி விடுமென்று
எவரும் எண்ணி யிருந்ததே யில்லை.
35
ஊரை முழுதும் உழக்கால் அளப்பாள்.
நாட்டை முழுதும் நாழியால் அளப்பாள்.
நரியை முன்னம் பரியாய் ஆக்கின
நாதனும்[2] கண்டு நாண, இவளும்
யானையைப் பூனை யாக மாற்றுவாள்.
40
பூனையை யானை போலக் காட்டுவாள்.
ஐயோ! உலகுக் கெங்கள் அருமை