பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. கடலாடு படலம்

நேர்ந்த வெல்லாம் நெடுநா ளாகியும்
நெஞ்சைவிட் டின்னும் நீங்க வில்லையே?
இவற்றை,
இறந்து போகுநாள் அன்றி, இடையில்
மறந்து போய்விட மருந்தும் இல்லையே? 5
சென்ற
ஆடி மாதம் அமாவாசை யன்ன்று
குடும்பத் தோடு குமரித் துறையில்[1]
தீர்த்த மாடச் சென்று, நாங்கள்
பட்ட பாடும் பரிசு கேடும் 10
சொல்வி முடியுமோ! சொல்லி முடியுமோ!
கரையில் தர்ப்பணக் கடனெலாம் முடித்து,
நீரில் இறங்காது நின்றனர் கணவர்.
நின்றனர், நின்றனர், நெடிது நின்றனர்.
கண்டவர், 'இதற்கென் காரணம்' என்றனர். 15
அவரும்,
'ஏக காலத் திவர்களை எல்லாம்
அங்கை பிடித்துநீர் ஆடு தற்குநான்


  1. 8. குமரித்துறை - கன்னியாகுமரி.