பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருடாஸ்திரப் படலம்

71

குறைந்த தானால் கொடுக்க முடியுமா? 90
பேயும் அஞ்சும் பெரும்ப ழஞ்சி
ஐய னிடத்தில் ஆண்டு தோறும்
கொண்ட கடனைக்[1] கொடுக்கா விட்டால்,
அவர், வயிற்றை ஊத வைத்திடு வாரே!
குறளியை[2] ஏவிக் கொன்றிடு வாரே! 95
நினைத்தி ராமல் நிதமும் எத்தனை
செலவுகள் வந்திடும், தெரியுமா உனக்கு?
'சானல் வாச்சர்'[3] சந்தனத் தேவர்க்கு
'அட்ரஸ்'[4] கொடுத்த வகைக்கோ ராறு


  1. 91-95. பெரும்பழஞ்சி என்பது திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள நான்குனேரியைச் சேர்ந்த ஒரு சிற்றூர். அதில் ஒரு பிராமணக் குடும்பத்திலுள்ளவர்கள் பெயர் பெற்ற மந்திரவாதிகளாயிருந்தார்கள். அவர்கள் இந்திர ஜாலம், மந்திர ஜாலம், மகேந்திர ஜாலம். கூடுவீட்டுக் கூடு பாய்தல்,
    ஜலஸ்தம்பம், வாயுஸ்தம்பம் முதலியவற்றில் மிகவும் தேர்ந்தவர்களென்று சொல்லுவதுண்டு. இவர்கள் ஆண்டுதோறும் இப்பக்கங்களிலுள்ள ஊர்களுக்கு வந்து ஜால வித்தைகள் செய்து பணம் பெற்றுப்போவதுண்டு. யாரேனும் தாங்கள் கேட்டபடி பணம் கொடுக்கவில்லையானால், தங்களுடைய ஜால வித்தைகளினால் அவர்களுக்குப் பலவிதத் தீங்குகள் செய்து விடுவதாகப் பயமுறுத்துவார்கள். ஏழை ஜனங்களும், பெரும் பழஞ்சி ஐயர் பணம் கொடுக்கவில்லையானால், வயிற்றுவலி உண்டாக்கி விடுவார் என்றும், குறளியை ஏவிவிட்டுக் கூரை, வைக்கோற் போர் முதலியவற்றில் தீயைக் கொளுத்தி விடுவார் என்றும் நம்பிப் பயமடைவார்கள். கொண்ட கடன்- கட்டாயமாகக் கொடுத்துத் தீரவேண்டிய தண்டம் (மனமில்லாமல் நிர்ப்பந்தத்திற்காகக்
    கொடுக்கும் தானம்.)
  2. 95. குறளி - குறளிச் பிசாசு.
  3. 98-99. சானல் வாச்சர் - நீர்ப்பாசன இலாகாவில் எட்டு ருபா சம்பளம் பெறும் ஒரு வேலைக்காரன். வாய்க்காலில் தண்ணீர் விடுவது இவன் இஷ்டத்தைப் பொறுத்தது.
  4. அட்ரஸ் - உபசாரப் பத்திரம்