பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்துப் படலம்

85

கடும்போர் செய்யும் இக்காலந் தன்னில்[1]
காரண வர்களே! காரண வர்களே! 120
குடும்பந் தோறும் கொடுங்கோ லரசு
நிலைத்திட முயல்வது நீதிதா னாகுமோ?
அது,
நீணிலத்து இனியொரு நிமிடம் நிற்குமோ?
ஐயோ! இவர் செய்யும் அநியா யங்களை 125
அறிபவர் யாரே! அறிபவர் யாரே!
கொடுங்கோ லரசர் குடிகளைப் போல், இக்
காரண வர்களின் கைக்கீழ்த் தங்கி
இரவும் பகலும் எவ்வெப் பொழுதும்
மாறாக் கண்ணீர் வடிய விட்டுத் 130
தீராத் துயரம் தீருநாள் எண்ணி
நைந்து நொந்து நாளைக் கழிப்பவர்
எத்தனை எத்தனை எத்தனை என்பேன்!"
என்றெலாம் சொல்லி இனிய மொழிகளால்
வாழ்த்தி நல்ல வரங்களும் கொடுத்துத் 135
தெருவில் இறங்கினார். சிறிது தூரம்
சென்று, பின்னும் சீறிச் சினந்து
வந்தார்; வந்த வரவில், மண்டை
படீரென வாசற் படியில் மோத,
முன்னிலும் கோபம் மூண்டு, "மூடா! 140
வஞ்சகா! உன்குட வண்டியைக்[2] கலக்கிப்


  1. 119. இக்காலம் : சென்ற முதல் மகாயுத்தம் நடந்த காலமாகிய 1914-1919-ம் ஆண்டு.
  2. 141. குடவண்டி: தொந்தி வயிறு.