பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடறிக் குடிமுடித்த படலம்

97

வல்லம் வல்லமாய்[1] மாம்பழம் அனுப்பவும், 195
பானை பானையாய்ப் பால்நெய் யனுப்பவும்,
மந்தை மந்தையாய் மாடுகள் அனுப்பவும்,
வண்டி வண்டியாய் வைக்கோல் அனுப்பவும்,
யாரால் முடியும்! யாரால் முடியும்;
எந்தக் குடும்பம் ஈடு நிற்கும்? 200
ஐயா.
வழக்கும் இழந்து வகையும் இழந்து,
யாவும் இழந்து உளம் ஏங்கி யிருக்கும்
கைலாசம் பிள்ளைக் கரையாளன்[2] வீட்டை
வக்கீல் பீஸு பாக்கி வகையில் 205
எழுபது ரூபாய்க்கு ஏலம் கூறிக்
கொட்டிக் கொட்டிக் கொண்டு போனதும்
நேற்றுத் தானே, நினைவு மில்லையோ?
இந்த மாசம் எட்டாந் தேதி
மேலத் தெருவில்............வீட்டில்[3] 210
ஜப்திக்கு வந்த தலைவன், ஐயோ!
எள்ளள வேனும் இரக்கமில் லாமல்,
அந்தக்
கிழவனைத் தூக்கிக் கீழே போட்டுக்
கட்டிலை வெளியில் கடத்தச் சொன்னதும், 215


  1. 165. வல்லம் - தென்னங் கீற்றினால் செய்யும் ஒருவகைக் கூடை
  2. 204. கரையாளன்: இது ஓர் உத்தியோகப் பெயர். கரையிலுள்ள வரிப்பணம் வாங்குபவர். தற்பொழுது நாஞ்சில் நாட்டின் பகுதி, ஊர் என்று பிரித்திருப்பது போல, முன்பு கரை, தேசம் என்றிருந்தது. கரையிலுள்ள பணப் பிரிவு செய்யும் உத்தியோகஸ்தர் கரையாளர் என்று அழைக்கப்பட்டார்.
  3. 210. ஏட்டில் பொடிவு.

ம. மா.-7