பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடேறிக் குடிமுடித்த படலம்

99

மடைக்குட் சென்று மறைந்து கொண்டதும்,
‘சாமி சுடலைச் சாம்பலி லாடி
விளையா டுதற்கு வேகமாய்ப் போகிறார்’
என்று நினைத்து அங்கிருந்தவ ரெல்லாம் 235
எழுந்து போனதும், எங்கும் தேடிக்
காணா தானதும், கடைசியில் உண்மை
தெரிய வந்ததும், செலவோடு செலவு என்று
ஏழு ரூபாய் எண்ணிக் கொடுத்து
வாறண்டை அன்று மடக்கி விட்டதும்[1] 240
நடந்த காரியமோ? நாடகந் தானோ?
வியாச்சியம், வேண்டாம், வியாச்சியம்! வேண்டாம்
தேடின முதலைத் தெருவில் வாரி
இறைக்க வேண்டாம்; இறைக்க வேண்டாம்.
அல்லும் பகலும் அலுப்பில் லாமல் 245
ஆஆ என்று அலை ஆமீன்[2] வாயில்
அகப்பட் டார்வெளி யாவது முண்டோ?
சுறா மீனையுமே தூக்கி விழுங்கும்
பொல்லா மீன்இது போலொரு மீனைக்
கடலினும் கூடக் கண்டவ ரில்லை. 250
எவரினும் பெரியவன் யானே ஆவேன்;
எப்பெரு வேலையும் எளிதில் முடிப்பேன்;
இம்மிரு கத்தையும் எடுத்தொரு நொடியில்
வானெலாம் சுற்றி வருவதற் குள்ள
ஆற்றலு முடையேன்; ஆனால், அத்திறம் 255
அனைத்தையும் வெளிப்படை யாகக் காட்ட


  1. 240. மடக்கிவிட்டது - ஆளைப் பிடிக்காமல் திரும்பிப் போகச் செய்தது.
  2. 246. ஆ ஆ என்று அலைகிற ஆமீன் - அமீனா.