பக்கம்:மர இனப் பெயர்த் தொகுதி 1.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்துறைச்‌ சொற்களைத்‌ திரட்டத்‌ திட்டமிட்டார்‌. இதுபற்றிய கருத்தை அவர்தம்‌ 'அகராதிக்‌ கலை' (1969) என்ற நூலில்‌ மரப்பெயர்த்‌ தொகுதி என்ற பிரிவில்‌ (பக்‌. 131-135) விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்‌. அவருக்குத்‌ துணையாக அமர்ந்த மாதையன்‌, சித்திரபுத்திரன்‌ ஆகிய இரு ஆய்வாளர்களும்‌ இத்‌ திட்டத்தின்‌ பரப்பை விரிவுபடுத்தினர்‌. தமிழிலக்கிய நூல்கள்‌ பலவற்றையும்‌ பார்த்து வேண்டிய மர இனப்‌ பெயர்களைத்‌ தொகுத்தனர்‌. குணபாடம்‌, சாம்பசிவம்‌ பிள்ளை அகராதி, சித்தவைத்திய அகராதி, தமிழ்ப்‌ பேரகராதி, ஆகியவற்றிவிருந்தும்‌ இன்னும்‌ பல நூல்களிலிருந்தும்‌ இவ்வொருபொருள்‌ பலசொல்‌ அகராதியை உருவாக்கியுள்ளளர்‌ . அல்லும்‌ பகலும்‌ அயராது பாடுபட்டதின்‌ விளைவாக இச்சிறந்த்‌ தொகுப்பை உருவாக்கித்‌ தந்துள்ளனர்‌.

தமிழ்ப்‌ பல்கலைக்கழக அடிப்படை நோக்கங்களில்‌ ஒன்று தமிழ்‌ மரபுச்செல்‌வத்தைத்‌ தமிழ்‌ மக்கள்‌ அறியும்‌ வகையில்‌ நூல்களாய் வெளியிடுதல்‌ ஆகும்‌. தொகுப்‌பியல்‌ துறையின்‌ முதல்‌ வெளியீடாக இந்நூல்‌ வெளிவருவதன்‌ வாயிலாக இந்‌ நோக்கம்‌ ஓரனவு நிறைவேறுகிறது.

சொல்வளம்‌ திரட்டுதல்‌ என்று பணியில்‌ இவ்வேடு முழு முனைப்போடு செயலாற்றியுள்ளது. படித்தவர்‌, படியாதவர்‌, உயர்‌ மக்கள்‌, பொதுமக்கள்‌ ஆகிய அனைவரும்‌ பயன்படுத்திய சொற்களை இதில்‌ காணமுடியும்‌. அரசு என்ற மரத்தைக்‌ குறிக்க 184 சொற்களைக்‌ காணலாம்‌. இதுபோன்று தமிழகத்தில்‌ உள்ள மர இனப்‌ பெயர்களின்‌ விரிவை அறிய இது துணைபுரியும்‌.

சித்த மருத்துவத்‌ துறையினர்‌ தமிழ்‌ மூலிகைகளை, இவ்வாறு வழங்கும்‌ பல பெயர்களின்‌ துணையால்‌ தம்‌ ஆய்வு நெறிகளில்‌ ஒரு வழிகாட்டியாக வரையறுத்த தெறியில்‌ பயன்படுத்த இயலும்‌. பலபடச்சென்று காலம்‌ வீணாகாமல்‌ மூலிகைகளில்‌ அப்பெயர்‌ கொண்ட சிலவற்றைப்‌ பிரித்துப்‌ பின்‌ அவற்றின்‌ பண்பு நலம்‌ கண்டு உரிய மருந்துக்கு ஏற்ற மூலிகையைத்‌ தனித்து அறிய எதிர்கால ஆய்வுக்குத்‌ துணை புரிய இச்சொற்றொகை பயன்படும்‌.

தொல்‌ அறிவியல்‌ துறை தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ பண்டைய இலக்கியங்‌களில்‌ காணும்‌ மர இனங்களைப்‌ பரந்த அளவில்‌ விளக்கமாகக்‌ காண்பதற்கு அவ்வப்‌போது அகராதி என்ற அளவில்‌ இத்‌ தொகுதி பயன்படும்‌.

மக்கள்‌ வழக்கில்‌ தமிழ்ச்‌ சொற்கள்‌ காலந்தோறும்‌ எத்தகைய வடிவம்‌ தாங்கி வருகின்றன என்பதை மொழியியல்‌ அடிப்படையில்‌ ஆராய்ந்து மொழி வரலாற்றை அறியவும்‌ இங்குள்ள சொற்கள்‌ துணைபுரியும்‌.

தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌ உருவாக்கிவரும்‌ பேரகராதியின்‌ சொற்‌ செல்வத்தைப்‌ பெருக்கவும்‌ இது உறுதுணையாக விளங்கும்‌.