பக்கம்:மர இனப் பெயர்த் தொகுதி 1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்வாறு பலநோக்க நிலையில்‌ பணிபுரிய இவ்வகராதி பயன்படும்‌. இத்தகைய பல அகராதிகள்‌ உருவாக இத்தொகுதி முன்னேரடியாக விளங்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை.

இப்பணி செவ்வனே உருவாகி வெளிவர ஒவ்வொரு கட்டத்திலும்‌ தோன்றும்‌ துணையாக இருந்த எங்கள்‌ துணைவேந்தர்‌ வ. அய்‌. சுப்பிரமணியம்‌ அவர்கட்குத்‌ தொகுப்பியல்‌ துறை என்றும்‌ நன்றி செலுத்தும்‌. அவரது அயரா ஆய்வுத்‌ தூண்டலுக்கு இத்துறையின்‌ முதல்‌ நூல்‌, மேலும்‌ பல வெளிவர வழிசெய்யும்‌.

தா. வே. வீராசாமி
பேராசிரியர்‌ - தலைவர்‌

தஞ்சாவூர்‌
22-6-85

தொகுப்பியல்‌ துறை
தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌