பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மெனவல் ஊதிகை தளவு கற்பு மாகதியென வழங்கு பெயர் முல்லை யாகும் ' (137) என்பது ஆசிரிய நிகண்டு நூற்பா. இவற்றை அடியொற்றி, கற்பு என்னும் சொல்லுக்கு முல்லை என்னும் பொருளை அனைத்து அகராதிகளும் தந்துள்ளன . முல்லைக்குக் கற்பு என்னும் பெயர் வந்த வரலாற்றைக் காண வேண்டும்: 1. இலக்கண நூல்களில் முல்லை ஆணும் பெண்ணும் அகவுணர்வால் காதலித்து மணந்து கொண்டு குடும்பம் நடத்தும் வாழ்க்கை நெறி அகத்திணை என்றும், மக்களின் மற்ற புற வாழ்க்கை நெறிகள் புறத் திணை என்றும் கூறப்படும். குறிஞ்சி, பாலை, முல்லை. நெய்தல், மருதம் என்னும் ஐந்தும் அகத்திணைகள் எனப் படும். இவை மரஞ் செடி கொடிகளின் பெயர் அடிப்படையில் பிறந்த பெயர்களே. இவற்றுள் ஒவ்வொன்றிற்கும் முதல், கரு, உரி என்னும் முப்பொருள்கள் உண்டு. முதல் என்பது, நிலமும் காலமுமாம். கரு என்பது திணைக்கு உரிய பொருள்களாம். உரி என்பது, அவ்வந் நிலத்தில் உள்ள அவ்வத் திணைக்கு உரிய ஒழுக்கச் செயல்களாம். குறிஞ்சிக்கு: நிலம் மலையும் மலைசார்ந்த இடமுமாம்; காலம் கூதிர்ப் பருவமும் முன் பனிப் பருவமும் நடு யாமமும் ஆகும்; கருப்பொருள் குறிஞ்சி மலர் முதலியன; உரி புணர் தலும் புணர்தல் நிமித்தமுமாம். பாலைக்கு: நிலம், வறண்ட பகுதி, காலம் வேனிலும் பின் பனிப் பருவமும் நண்பகலுமாம்; கரு பாலை நிலப் பொருள்கள்; உரி பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாம். முல்லைக்கு: நிலம் காடும் காடு சார்ந்த இடமு மாம்; காலம் கார்ப் பருவமும் மாலைப் பொழுதுமாம்; கரு முல்லைப் பூ, ! o மர இனப் | துயர்வைப்புக் கலை 2} .تهیه ஆல்லைப் பூ முதலியனவாம்; உரி இருத்தலும் இருத்தல் 5. நிமித்தமுமாம். நெய்தலுக்கு: நிலம் கடலும் கடல் சார்ந்த j: Ént-GP நேரமுமாம்; கரு நெய்தல் கொடி முதலியன உரி இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாம். மருதத்துக்கு நிலம் வயலும் வயல் சார்ந்த இடமுமாம்: காலம் அறுவகைப் பருவமும் வைகறை யும் காலை நேரமுமாம்; கரு மருத மரம் முதலியன உரி மாம்; காலம் அறுவகைப் பருவமும் மாலை ஊடலும் ஊடல் நிமித்தமுமாம். விரிவஞ்சி, இங்கே நமக்கு மிகவும் இன்றியமையாததான

உரிப் பொருளைக் கூறும் இலக்கண நூற்பாக்களை மட்டும் கீழே காண்போம். இதற்காகவே இவ்வளவு வழிகடந்து

வரவேண்டியதாயிற்று. தொல்காப்பியம்: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் கிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே’ (பொருள்-அகத்திணையியல் - 14) நம்பியகப் பொருள்: புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றின் கிமித்தமும் என வாங்கு, எய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தே' (அகத்திணையியல் - 25) வீரசோழியம்: "புணர்தல் 'பிரிதல் பாலை', 'முல்லை குறிஞ்சி', கிழத்தி மனையிருத்தல்", ஊடல் மருதத் திணை’, ‘இரங்கல் நெய்தல்'