பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. குயிலகம் (மா மரத்தின் பெயர்கள்) 1. சார்பினால் பெற்றவை: 1-1 கோகிலவாசம் : மக்கள் தாம் வாழும் வீட்டிற்கு அகம், மனை. இல்லம், நிலையம், குடில், நிவாசம், விலாசம், வாசம் முதலிய சொற்களில் முடியும் பெயர்களை இட்டு வழங்குவது உலக இயற்கை. அம்மணி என்பவர் வசித்த வீட்டுக்கு 'அம்மணி வாசம்' என்றும், கோவிந்தன் என்பவரின் வீட்டுக்குக் கோவிந்த வாசம் என்றும், இன்ன பிற மாதிரியாகவும் பெயர் வைத்திருப்பதைக் காணலாம். மக்களே அன்றி. பறவைகள் தங்கி வாழும் இடத்திற்கும் இத்தகைய பெயர் வைத்திருக்கும் புதுமையைக் கண்டது உண்டா? உண்டு. குயில் வாழும் இடத்திற்குக் குயிலகம்’ என்று தமிழிலும், கோகில வாசம் என வடமொழியிலும் பெயர் வைக்கலாம். பின்னது, சித்த வைத்திய மருத்துவ அகராதியில் காணப்படுகிறது. கோகிலம் என்றால் குயில்: வாசம் என்றால் வசிக்கும் இடம்; குயில் வசிக்கும் இடம் கோகில வாசம், அது எது? மாமரந்தான் அது! எவ்வளவு அழகிய பெயர்: 1-2 கோகிலாணங்தம் : கோகிலத்திற்கு (குயிலுக்கு) ஆனந்தம் (மகிழ்ச்சி) அளிக்கும் இடமாதலின், மாமரத்திற்குக் கோகிலானந்தம்' என்னும் பெயரும் உண்டு என்பதாகச் சாம்பசிவம் s பெயர்வைப்புக் கலை 35 பிள்ளையின் தமிழ் - ஆங்கில அகர முதலி அறிவிக்கிறது. மாமரத்திற்கு மேற்கூறிய இரு பெயர்களும் சார்பினால் வந்தவை. 2. காலத்தால் பெற்றவை: 2-1 வசந்த தூதம்: நாம், இலக்கிய-வரலாற்று நூல்களில் எத்தனையோ துதுகளை - துர்துவர்களைப் பற்றிப் படித்திருக்கின்றோம். இராமனுக்காக இராவணனிடத்தில் துTது சென்ற அனுமானுக்கு இராம துரதன்' என்னும் பெயர் உண்டு. மக்களுக்கு மட்டுந்தானா துரதுவர் உளர்? காலங்கட்கும் துரதுவர் உண்டு போலும்; இளவேனில் காலம் எனப்படும் வசந்த காலத்துக்கும் தூதுவன் உண்டு. இன்பத்திற்குரிய இளவேனிற் காலம் வருகிறது - வந்து விட்டது என்பதை மக்கட்கு அறிவிக்கும் துரதுவன் மாமரமாம். என்ன வியப்பு; இராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அனுமான்: வசந்தத்தின் வருகையை மக்கட்கு அறிவிக்கும் தூது, தளிர்த்து - தழைத்து - அரும்பி-பூத்து - காய்த்து - கனிந்து பொலிவுறும் மாமரமாகும். இஃது இளவேனில் காலத்தில் நிகழ்வது. வசந்தம் என்றால் இளவேனில், அதனால் மாமரத்திற்கு வசந்த துரிதம்' என்னும் பெயர் வழங்கப் பட்டுள்ளது. இதனை ஜூபிலி தமிழ்ப் பேரகராதியில் காணலாம். குயிலுக்கும் வசந்த துrதம் என்னும் பெயர் உண்டென இவ்வகராதி அறிவிக்கிறது. 2-2,3 வசந்த தரு திரு: மற்றும், வசந்த காலத்தின் சிறப்பு மரம் என்னும் பொருளில் வசந்த தரு’ என்னும் பெயர், சாம்பசிவம் பிள்ளையின் மருத்துவம்-மரஇயல்-அறிவியல் பற்றிய தமிழ் ஆங்கில அகர முதலியிலும், வசந்த காலத்தின் செல்வம் என்னும் பொருளில் வசந்த)திரு என்னும் பெயர்.ஜூபிலி