பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மர இனப் பல நிகண்டுகளில் எமனுக்குப் பின்வரும் பெயர்கள் தரப்பட்டுள்ளன : தருமன் (அறநெறியில் நடப்பவன்), சமன் (எல்லா ரிடத்தும் சமமாக நடந்து கொள்பவன்), நடுவன் (நடுவு நிலைமை உடையவன்), செங்கோல் கடவுள் (அறத்தொடு தன் ஆட்சியைப் புரிபவன்). எமனுக்கு இப்பெயர்கள் ஏற்பட்டதற்குரிய காரண மாவது: யாராயிருப்பினும், அவரவர் வாழ்நாள் (ஆயுள் - விதி) முடிந்ததும், உடலிலிருந்து உயிரைப் பிரித்து விடுவான் என்பதே. இதனை, மணிமேகலையில் உள்ள , ' தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான் கொடுங்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப” (6 : 97 - 100) என்னும் பகுதியால் அறியலாம். கொல்லும் தொழில் கொடுந் தொழிலாயினும், எமன், யாவரிடத்தும் நடு நிலைமையுடன்-சமமாகச் செயல்படுவான். தன் வாழ்நாளின் முடிவில் சிவனது திருவுருவச் சிலையைக் கட்டிப் பிடித்துக் கொண்ட மார்க்கண்டன் மீது, சிவனது உருவச்சிலையோடு சேர்த்துப் பிணிப்புக் கயிற்றை விசி இழுத்தவன் எமன் என்னும் புராணக்கதை ஈண்டு நினைவுகூரத் தக்கது. பாண்டவருள் மூத்தவன் எமனுக்குப் பிறந்தவனாதலின், தருமன், தரும மைந்தன், தரும புத்திரன் எனப்பட்டான். இவ்வளவு வழி கடந்து பயணம் செய்தது, தருமம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு நேரான அறம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு எமன் என்னும் பொருள் உண்டு என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துவதற்கேயாம். பெயர்வைப்புக் கலை 5 ! எனவே, ஆாய் பரத்தைக் கொல்லும் வா ைபுத் r ரததை - {s கிழங்காகிய - வாழைக் குலையாகிய எமன் உள்ளே மறைந் திருப்பதால், வாமுைக்கு அற மறை' என்னும் பொருள் ஏறறதாகும. இப்பெயர்கள் வாழை மரத்திற்குச் செயலால் ஏற் பட்டவை யாகும். (குறிப்பு: அறம் மறை' என்பது புணர்ச்சியிலக்கண விதிப்படி ம் கெட்டு அற மறை' என்றாயிற்று.) வாழைக்கு மேற்கூறிய பெயர்களேயன்றி மற்றும் பல பெயர்கள் பல காரணங்களால் தரப்பட்டுள்ளன. 3. வடிவால் வந்த பெயர்கள்: 3-1 வாழை பார்ப்பதற்கு மிகவும் அழகான மரமாகும். அதனால் இதற்குத் தேவ கன்னி என்னும் பெயர் உண்டு. தேவ உலகத்தின் அழகிய நாட்டிய மாதர் நால்வருள் அரம்பை என்பாளும் ஒருத்தி, இந்த அரம்பை என்னும் பெயரும் வாழைக்கு உண்டு. " துன் அரம்பை கிளம்பிய தொல்வரை துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்' என்பது கம்ப ராமாயணம் - வரைக் காட்சிப் படலப் (39) பாடல் பகுதியாகும். முதல் அடியில் உள்ள ..orthsei. என்பது வாழை மரத்தைக் குறிக்கும். இரண்டாம் அடியில் உள்ள அரம்பையர் என்பதற்குத் தெய்வ டி.துணிச்: ఊపోడా பொருள். ஊரு என்றால் துடை, மலையில் ஆகு 晏 # &: - 爱” ன்ப்த், (அழகாகவும் வழவழப்பாகவும்) தோன் துன்ே కాన్రాన్స్ట్రాశా இதன் பொருள்.