பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மர இனப் புதுமைச் சுவையின்பத்தால் என்னைக் கவர்ந்த பெயர்களைத் தேர்ந்தெடுத்துத் தனியே குறித்து வைத்தேன். இப்பெயர் களைப் பல கூறுகளாகப் பிரித்துள்ளேன். அக்கூறுகள்: பயன், பண்பு, நிறம், வடிவம் (உடற்கூறு), சார்பு, இடம், காலம், தலைமை, செயல், பகை, எண், உவமை, உயர்தினைப் பெயர், தெய்வப் பெயர், இருபொருள், பிற மொழி, மொழி பெயர்ப்பு, சொல் விளையாட்டு முதலியன. இக் காரணங்களால் பெற்ற பெயர்கள் பல. 2. கலை வகைகள் இந்தப் பெயர்வைப்பு முறை, உள்ளத்திற்கு மகிழ்வும் வியப்பும் அளிக்கும் ஒரு கலையாகத் தோன்றுகிறது. உலகில் கலைகள் பல. பல்வேறு எண்ணிக்கைகளால் கலைகள் குறிப்பிடப்படுகின்றன. கலைகள் Lİ @l) வகைகளாகப் பிரிக்கவும் படுகின்றன. ஆய கலைகள் அறுபத்துநான்கு என்பர் சிலர்: இவற்றினும் குறைவாகக் கூறுவர் சிலர். இவற்றினும் கூடுதலாகச் சொல்பவர் ஒருசிலர். இவற்றை யெல்லாம் சுருக்கி, அழகுக்கலை, அறிவுக்கலை, திறன்கலை, தொழில்கலை, ஒப்பனைக்கலை, இலக்கியக்கலை, புதுப் பொருள் ஆக்கக்கலை, பொழுதுபோக்குக்கலை, வாழ்க்கைக் கலை, கடவுட்கலை - முதலிய சில கலைகளுள் மற்றவற்றை அடக்கலாம். 2. 1 கவின் கலை - பயன் கலை இறுதியாகச் சுருக்கிக் கூறியுள்ள கலைகளையும் கவின் «sose (Fine Arts), uusir xspao (Applied Arts) ar särssyth இரண்டலுள் அடக்கலாம். வாழ்க்கைக்கு இன்றியமையாத நேர்ப்பயன் அளிக்கும் ஆக்கக் கலைகளைப் பயன்கலைகள் எனலாம். வாழ்க்கைக்கு இருந்துதான் தீரவேண்டும் என்ற பெயர்வைப்புக் கலை 7 கட்டாயமில்லாத சுவைக் கலைகளை வின் கலைகள் கான லாம் . 2.2 கலையின் இலக்கணம் கலை என்றால் என்ன என்னும் வினாவிற்கு உரிய விடை யாகப் பல்வேறு இலக்கண விளக்கங்கள் கூறப்படு கின்றன . நாம் சுருக்கமாகச் சில விளக்கங்கள் காண்போம்; 1 . கலை, கற்பனையின் தொடர்புடையது. 2. கலை, இயற்கையினும் வேறான - செயற்கைச் சார்பு உடையது. 3. கலை, புதுமையும் திறமையும் கவர்ச்சியும் சுவையும் உணர்ச்சியும் உவகையும் ஆகியவற்றுள் சிலவோ - பலவோ கலந்தது. 4. கலை, உண்மையா பொய்யா - சரியா தவறா என்று ஆராயும் எண்ணத்திற்கு (சிந்தனைக்கு) அப்பாற் பட்டது. 5. ஒரு கவின் படைப்போ அல்லது ஒரு பயன் படைப்போ , அது தொடக்கத்தில் தோன்றிய காலத்தில் இருந்த நிலையினும், நாளடைவில் மிக மிக மேலாகக் கற்பனையால் புதுப் புதுச் சுவையான - கவர்ச்சியான நிலையை அடைகிறபோது, அங்கே கலை பிறந்துவிடுகிறது. அத்தகைய யாதொன்றும் கலை' என்னும் கவர்ச்சியான பட்டத்துடன் வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையுடன், மர இனப் பெயர் வைப்புக் கலை குறித்து எண்ணிப் பார்க்கலாம். 3. மர இனப் பெயர் வைப்புக்கலை மர இனங்கள் யாவற்றிற்கும் பண்டுதொட்டு யா அரும் -- ہنحصیل * 够 - 争 - 義 வழங்கிவரும் இயற்பெயர்கள் உண்டு. அத்த இவ#Guer#assir