15 அந்தக் குழந்தை நடிகையைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்று குழந்தை மாறன் அடம் பிடிக்கும் நிகழ்ச்சி அன்றாடம் நடைபெறும். ஊரார் இதற்காகவே மாறனைக் கிண்டல் செய்வார்கள். நான் செல்லமாக மாறன் முதுகில் இரண்டு தட்டு தட்டி படிப்பு சொல்லிக் கொடுக்க இழுத்துக் கொண்டு போவேன். - ஒருநாள் நான் திருவாரூர் பள்ளி விடுமுறையை முன்னிட்டு கிராமத்துக்கு வருகிறேன். கிராமத்து வீடு முழுதும் சுவர்கள், கதவுகள் எல்லா இடத்திலும் "பேபி சரோஜா” படங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது யார் வேலை என்று கோபமாகக் கேட்கிறேன். “எல்லாம் உன் மருமகன் தேராசன் வேலை தான்" என்று சிரிக்கிறார் என் அம்மா. தியாகராஜ சுந்தரம் என்ற மாறனின் முதல் பெயரை "தேராசன்" என்று தான் அஞ்சுகத்தம்மையார்; (மாறனின் பாட்டி) அவர்கள் மறையும் காலம் வரையில் அன்போடு அழைத்து மகிழ்வார். திரைப்படம், நாடகம் இவற்றில் விருப்பமுடையவராக இளமைக் காலத்தில் மாறன் இருந்தாலும்கூட படிப்பில் ஆழ்ந்த கவனமுடையவராகத் திகழ்ந்தார். கிராமப்புறத்து ஆசிரியர் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து என்னை திருவாரூரில் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் படிவத்தில் சேர்த்து விடுவதாகச் சொல்லி அழைத்துப் போய் அங்கே போய் மேல் வகுப்புகளில் தொடங்கி தேர்வு எழுதி, இறுதியில் மூன்றாம் படிவம் - இரண்டாம் படிவம் - முதல் படிவம் ஆகியவற்றுக்குத் தேர்வு கிடைக்காமல் ஐந்தாம் வகுப்பில் என்னுடைய பிடிவாத குணத்தின் காரணமாக, என்னைத் தேர்வு தேர்வு செய்து
பக்கம்:மறக்க முடியுமா.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை